நூற்றுக்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்ஸிகோவில் நடைபெற்றது.


ப்ரைட் மாதம்:


LGBT சமூகம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை பிரைடாக அதாவது பெருமையாக‌ கொண்டாடுகிறது. இது  LGBTQAI+ சமூகம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் பாகுபாடுகளை அங்கீகரிப்பதற்காகவும், சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக நடத்தப்படுகிறது. பிரைட் மாதம் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடையும்.செப்டம்பர் 6, 2018 அன்று, 377வது பிரிவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது . அது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு ஜூன் மாதமும் நடத்தப்படும் வருடாந்திர LGBT கொண்டாட்டங்களாக மாறியது.




தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்:


இந்த மாதத்தில் மெக்ஸிகோவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலர் கூட்டாக திருமணம் செய்துகொள்வார்கள். கடந்த 2020 முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டனர். அன்றைய தினம் ஒரே மாதிரியான உடையணிந்த தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டு முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது மெண்டல்சனின் ’வெட்டிங் மார்ச்’ உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டது. வானவில் நிறத்திலான கேக் வெட்டி திருமணத்தைக் கொண்டாடினர்.






மெக்ஸிகோவில் சட்டப்பூர்வம்:


மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ நகரம் கடந்த 2010ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. அந்நாட்டில் உள்ள 32ல் 26 மாநிலங்கள் இதை அங்கீகரித்திருக்கின்றன. தன்பாலின திருமணத்தையொட்டி நேற்று பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 




பிரைட் தாய் என்றும் அழைக்கப்படும் பிரெண்டா ஹோவர்ட், முதல் LGBT பிரைட் அணிவகுப்பை ஒருங்கிணைத்தார். அதன்பிறகு, தன்பாலின ஈர்ப்பாளர்களின் பேரணிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. பிபிசியின் கூற்றுப்படி, உலகில் 28 நாடுகள் மட்டுமே ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கின்றன, மேலும் 69 நாடுகளில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டங்கள் உள்ளன.