அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கானுயிர் ஆய்வாளர்கள்கள் குழு ஒன்று உலகின் மிகப்பெரிய பர்மிய மலைப்பாம்பைக் கண்டுபிடித்துள்ளதோடு, அதனைப் பிடித்துள்ளனர்.


பெண் பாம்பான இது சுமார் 18 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 97.5 கிலோ எடை கொண்டதாகவும் இருப்பதோடு 112 முட்டைகளையும் கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் ஃப்ளோரிடாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள எவர்க்ளேட்ஸ் சதுப்புநிலப் பகுதியில் இந்தப் பாம்பு பிடிக்கப்பட்டது. எனினும், உலகின் மிகப்பெரிய பாலூடி விலங்காக இந்தப் பாம்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இந்த ஆய்வின்படி, ஆய்வாளர்கள் ஆண் பாம்புகளின் முதுகுகளில் ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்கள் உதவியோடு கண்காணிக்கப் பயன்படுத்துகின்றனர். இதன்மூலமாக பாம்புகளின் முட்டையிடும் குணம், நடமாட்டம், வாழ்விடம் முதலானவை குறித்து அறிந்துள்ளனர். மேலும், இந்த ஆண் பாம்புகளின் உதவியோடு அதிகளவில் முட்டைகள் இடப்படும் இடங்களையும், பெரிய அளவு கொண்ட, முட்டையிடும் பெண் பாம்புகளையும் அடைய உதவ முடிகிறது. 


இந்த ஆய்வாளர் குழுவின் மேலாளரான இயான் பார்டோசெக், `வைக்கோல் நிரம்பிய இடத்தில் ஊசி விழுந்தால் எப்படி கண்டுபிடிப்பது? அதற்காக காந்தத்தைப் பயன்படுத்தலாம்.. அதே போல நமது ஆண் பாம்புகள் இப்பகுதியில் மிகப்பெரிய பெண் பாம்புகள் மீது ஈர்ப்பு கொண்டவை’ எனக் கூறியுள்ளார். 



முழுவதாக ட்ராக் செய்த பிறகு, இந்த ஆய்வாளர்கள் முட்டையிட்டுள்ள பாம்பையும், அதன் முட்டைகளையும் காட்டுப் பகுதியில் இருந்து நீக்குகின்றனர். மிகப்பெரிய பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் குழு டியான் எனப் பெயரிடப்பட்ட ஆண் பாம்பின் மூலமாக மேற்கு எவர்க்ளேட்ஸ் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண் பாம்பு அடிக்கடி அதே பகுதிக்குச் சென்று வந்ததால் உயிரியல் ஆய்வாளர்கள் குழுவினர் அதன் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். 


இந்த சந்தேகம் உண்மையாகவே பெண் பாம்பிடம் இட்டுச் செல்வது மட்டுமின்றி, ஃப்ளோரிடா மாகாணத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பாம்பாக அமைந்துள்ளது. இந்தப் பெண் பாம்பு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டதில், அதன் வயிற்றில் சுமார் 122 முட்டைகள் இருந்தது தெரிய வந்தது. 



மேலும், அது இறுதியாக உண்ட உணவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்தப் பெண் பாம்பு வளர்ந்த வெள்ளை மான் ஒன்றை உணவாக உண்டிருப்பது தெரிய வந்துள்ளது. 


ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பர்மிய மலைப்பாம்புகள் அப்பகுதியைச் சேர்ந்தவை அல்ல என்பதால், அப்பகுதியின் சூழலியலைக் கெடுக்கின்றன. இதுகுறித்து, `பெண் மலைப்பாம்புகளை சூழலியலில் இருந்து நீக்குவது என்பது எவர்க்ளேட்ஸ் சூழலைக் கெடுக்கும் விலங்குகளின் பெருக்கத்தைத் தடுப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. மேலும், இப்பகுதிக்குச் சொந்தமான விலங்குகளின் உணவும் அவற்றிற்கு சென்று சேரும்’ எனக் கூறியுள்ளார்.