வீடற்ற நபரை நாய் ஒன்று கட்டிப்பிடித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப்பார்ந்த நெட்டிசன்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பலரின் இதயங்களை வென்ற இந்த வீடியோ, 7.47 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், கிட்டத்தட்ட 48,000 லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.


நாய்கள் எப்போதும் மனிதனின் சிறந்த நண்பனாக கருதப்படுகின்றன. அவைகள் அதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன. பல ஆண்டுகளாக, ஒரு நாய் அதன் உரிமையாளரை நேசிப்பதும், எப்போதும் அவர்களிடம் திரும்பி வருவதும் போன்ற கதைகள் கொண்ட  பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன.


நீங்கள் ஒரு நாயின் நண்பராக இருக்க, அதை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது தத்தெடுக்கவோ தேவையில்லை. விலங்குகள் உங்களை நேசிப்பதற்கு மிகக் குறைவான பச்சாதாபமும் இரக்கமும் தேவைப்படும். மேலும், சமூக வலைதளங்களில் இதுபோன்ற வீடியோக்கள் நிறைந்துள்ளன. அங்கு தெருக்களில் அல்லது பிரச்சனையில் உள்ளவர்களுக்கு நாய்கள் உதவுவதை நீங்கள் காணலாம். 'நாய்களுக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்' என்று மக்களைச் சொல்ல வைக்கும் மற்றொரு மனதைக் கவரும் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோவில், ஒரு லாப்ரடோர் வகை நாய், தெருவில் வீடற்ற மனிதனை அணுகுவதைக் காணலாம். சில வினாடிகளுக்குப் பிறகு அவருக்கு மிகவும் தேவையான அந்த அணைப்பை அளித்து, அந்த மனிதனைக் கட்டிப்பிடிப்பதை பார்க்கலாம். மனிதனைக் கட்டிப்பிடிப்பதற்கு முன், நாய் அவரை சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. அவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தனர்.


வீடியோ பார்க்க:






இந்த வீடியோ இணையம் முழுவதும் இதயங்களை வென்றது மற்றும் மக்கள் அதை விரும்புகின்றனர். வீடற்ற மனிதனிடம் நாயின் சைகை மற்றும் அன்பை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த வீடியோ டுவிட்டரில் 'Buitengebieden' என்ற பயனரால் பகிரப்பட்டது. 7.47 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் கிட்டத்தட்ட 48,000 லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண