எஸ்தோனியாவைச் சேர்ந்த நபர், தனது காதலியிடம் வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அயர்ன்மேன் டிரையத்லான் பந்தயத்தில் பங்கேற்ற நபர், போட்டியை முடித்து விட்டு, தனது காதலியிடம்  காதலை சொல்ல திட்டமிட்டிருந்தார். அயர்ன்மேன் டிரையத்லான் பந்தயத்தை முடித்து விட்டு, 6 வது இடத்தை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தார்.


அயர்ன்மேன் டிரையத்லான்:


அயர்ன்மேன் டிரையத்லான் பந்தயம் என்பது மிகவும் கடுமையான போட்டியாகும். இப்போட்டியானது, பல போட்டிகள் உள்ளடக்கியதாகும். இப்போட்டியில் சில தூரம் நீச்சலடித்து செல்ல வேண்டும்.






அதனை தொடர்ந்து, சைக்கிள் பந்தயம் மூலம் சில தூரத்தை கடக்க வேண்டும். பின்னர் சில தூரம் மாரத்தான் ஓட்டம் பந்தயம் இருக்கும். இவ்வாறு 10 மணி நேரத்துக்கு மேலாக நடக்கும் போட்டியில் பங்கேற்ற எஸ்தோனியா நாட்டைச் சேர்ந்த நபர், வெற்றிகரமாக பந்தயத்தை முடித்து 6வது பெற்றார்.


கைகூடிய காதல்:


அயர்ன்மேன் டிரையத்லான் பந்தயத்தை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியில், தனது காதலியிடம் காதலை சொல்ல முற்பட்ட போது, திடீரென கீழே விழுந்தார். பந்தயத்தில் பங்கேற்ற களைப்பில் எழ முடியாமல் இருந்தார். உடனே அருகே இருந்த 2 நபர்கள், அவரை தூக்கி பிடித்தனர். கால் வலி இருந்த போதும், அதை பொருட்படுத்தாது காதலை வெளிப்படுத்தினார். இதை கேட்ட அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். உடனே, காதலை ஏற்றுக் கொள்வதாக காதலி தெரிவித்தார். இது கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மேலும் அங்கு குழுமியிருந்த மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த வீடியோ பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.