✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?

Advertisement
செல்வகுமார்   |  24 Sep 2024 07:31 PM (IST)

Sri Lanka New Prime Minister: இலங்கை அதிபராக அநுர குமார திஸாநாயக பதவியேற்றுள்ள நிலையில் , பிரதமராக  ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்

இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் 3வது பெண் பிரதமராவார்.

Continues below advertisement

புதிய பிரதமர்:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மத்தியில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் களம் கண்ட அனுரா குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அந்நாட்டின் 9ஆவது அதிபராக  நேற்று அவர் பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய அதிபர் திஸாநாயக்கவினால், புதிய அமைச்சரவையானது நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்த தருணத்தில், இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி சார்பாக ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, இன்று பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

Continues below advertisement

இதற்கு முன்னதாக பெண் பிரதமர்களாக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக பதவி வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் பிரதமர் ஹரிணி அமரசூரிய.?

பிரதமர் ஹரிணி அமரசூரிய 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிணி அமரசூரிய, அரசியலில் நுழைவதற்கு முன்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றினார்.

மேலும் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு, இலங்கையின் கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆய்வுகளை செய்து, அது தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்த நிலையில், அரசியலில் களமிறங்கினார். 

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் ஆய்வுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தற்போது பிரதமராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம், இலங்கையின் 3வது பெண் பிரதமராக அமரசூரிய பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Published at: 24 Sep 2024 03:13 PM (IST)
Tags: Sri Lanka Sri Lanka PM PM Harini amarasuriya
  • முகப்பு
  • செய்திகள்
  • உலகம்
  • Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.