தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை


ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக வழக்கில், தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை சென்னையில் 10 இடங்களிலும் புதுக்கோட்டை மற்றும் நாகர்கோயிலில் தலா ஒரு இடத்திலும் இன்று காலை முதல் சோதனை நடக்கிறது


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி


டிட்டோஜாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி, விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் சுமார் 30.5% ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!


சென்னையில் துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு உயர்நிலை சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகளுக்கு இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறுவதில் உள்ள தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தினார்.


தேசிய அளவில் சாதித்த தமிழ்நாட்டு மாணவன்


டெல்லியில் நடந்த இந்திய அளவிலான சைனிக் முகாமில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 'ஸ்னாப் டீம்' பிரிவில் தங்கம் வென்றுள்ளார் நெல்லை மாவட்டம் |மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளி மாணவர் சண்முகம். “வச்ச குறி தப்பாமல் திறமையை வெளிப்படுத்திய மாணவருக்கு சல்யூட்” என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து


எட்டாத உயரத்தில் தங்கம்


ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7000ஆக உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,000-க்கு விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி. வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் ரூ.92.90-க்கு விற்பனையாகிறது.


மனிதகுலத்தின் வெற்றி போர்க்களத்தில் இல்லை - பிரதமர் மோடி


நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்காலத்திற்கான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பேசும்போது, “மனித குலத்திற்கான வெற்றி போர்க்களத்தில் இல்லை, ஒன்றுபட்ட சக்தியிலேயே உள்ளது” என்றார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். 


முதலமைச்சர் சித்தராமையாவிற்கு ஆறுதல் கிடைக்குமா? 


முடா முறைகேடு குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் கெலாட் அளித்த அனுமதியை எதிர்த்து, தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் ரூ.3,800 கோடி ஊழல் நடந்ததாக புகார்.


இதுவே கடைசி - டிரம்ப் திட்டவட்டம்


அமெரிக்க அதிபர் தேர்தலிலீ நான் போட்டியிடுவது இதுவே கடைசி முறை. ஒருவேளை தற்போது நடக்கும் போட்டியில் தோல்வி அடைந்தால் மீண்டும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்தமுறை நிச்சயம் நான் வெல்வேன் - குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்


லெபனானில் 500-ஐ கடந்த உயிரிழப்பு


தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழ் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.1,600-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.  மேலும் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரித்துள்ள நிலையில், தீவிரத்தன்மையை குறைக்க உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.


தமிழக செஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு


ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற இந்திய அணியில் இருந்த, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.