இசைக் கலைஞர் க்ரைம்ஸ் இந்த வாரம் அளித்துள்ள ஒரு நேர்காணலில், தனது எக்ஸ் பாய் ப்ரெண்ட் எலன் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் வாழ்ந்தார் என்று கூறியுள்ளார்.
வேனிட்டி ஃபேருக்கு அளித்துள்ள பேட்டியில், க்ரைம்ஸ் எலனுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் போது மெத்தையின் பக்கவாட்டில் ஒரு துளை இருந்த சம்பவத்தை அந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். அதை சரிசெய்ய புதிய மெத்தை ஒன்றை வாங்குவதற்குப் பதிலாக, மஸ்க் எனது வீட்டிலிருந்து மெத்தையைக் கொண்டு வருமாறு பரிந்துரைத்தார்.
"ப்ரோ ஒரு புதிய மெத்தை கூட வாங்கமாட்டார்," என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
"ப்ரோ ஒரு பில்லியனர் போல் வாழவில்லை. ப்ரோ வறுமைக் கோட்டிற்கு கீழே சில சமயங்களில் வாழ்கிறார்," என்று வேனிட்டி ஃபேர் பேட்டியில் கலைஞர் க்ரைம்ஸ் கூறியுள்ளார்.
’குறைந்தது 40,000 டாலருக்கான ஒரு வீட்டில் நாங்கள் வாழ்ந்திருக்கலாம். எங்களை அக்கம்பக்கத்தினர் படம்பிடித்திருப்பார்கள்.ஒரு செலப்ரிட்டிக்கான வாழ்க்கை எங்களுடையது இல்லை. நான் தொடர்ச்சியாக எட்டு நாட்கள் பீநட் பட்டர் மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்தேன்”, என்கிறார் க்ரைம்ஸ். மே 2020 இல், மஸ்க் தனது அனைத்து உடைமைகளையும் விற்பதாகவும், இனி தனக்குச் சொந்தமாக வீடு எதுவும் இல்லை என்றும் ட்வீட் செய்திருந்தார். அவர் ஸ்பேஸ்எக்ஸில் இருந்து வாடகைக்கு எடுத்த அமெரிக்க டாலர் 50,000 மதிப்பிலான சிறிய வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய பணக்காரருடன் டேட்டிங் செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பகிர்ந்துள்ள க்ரைம்ஸ். "இரண்டு உலகங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது" போல அது என்னை உணர வைத்தது எனக் கூறியுள்ளார் க்ரைம்ஸ்.
"அதாவது, நான் ஒரு வர்க்க துரோகி என்று மக்கள் கூறும்போது, அது தவறாக எனக்குத் தோன்றியது," என்கிறார் க்ரைம்ஸ். "நான் தீவிர இடதுசாரியாக இருந்தேன், ஆனா நான் ஒரு முதலாளித்துவ ஜனநாயகவாதியாக மாறினேன். இதனால் என் மீது நிறைய பேர் வருத்தமடைந்தனர்." என்கிறார்.
அதே நேர்காணலில், க்ரைம்ஸ் தனக்கும் மஸ்க்கிற்கும் ரகசியமாக இரண்டாவது குழந்தை பிறந்ததாகவும், அவர்கள் "ஒய்" என்று அழைக்கும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதாகவும் கூறியுள்ளார். க்ரைம்ஸ் எலனுக்கு பிறந்த மூத்த மகன், X Æ A-Xii - "எக்ஸ் ஏ ஐ ஆர்க்கேஞ்சல்" என்று அழைக்கப்படுகிறார் அதன்பிறகு பிறந்த மகள் Y, அவர் பெயர் எக்ஸா டார்க் சிடரியல் மஸ்க், என அழைக்கப்படுகிறார். எக்ஸா வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தை. மஸ்க்கின் ஏழாவது பிள்ளை.
மூன்று வருடகால டேட்டிங்குக்குப் பிறகு தானும் க்ரிம்ஸுன் பிரிந்துவிட்டதாக அண்மையில்தான் எலன் கூறியிருந்தார். மேலும் அவர் ஆஸ்திரேலிய நடிகர் நடாஷாவுடன் அண்மையில் பொதுவில் காணப்பட்டார்.