மெக்சிகோவைச் சேர்ந்த கேத்ரினா எனும் மூதாட்டி தன் கடைசி ஆசையாக தன் கல்லறை மீது ஆணுறுப்பு சிலையை வைக்க வேண்டும் எனக் கோரியிருந்த நிலையில், அவரது கடைசி ஆசையை அவரது குடும்பத்தார் நிறைவேற்றியுள்ளனர்.


99 வயது மூதாட்டியின் வித்தியாசமான ஆசை


தான் வாழும் காலத்தில் ஆணுறுப்புகளின் மீது பெரும் ஈர்ப்புடன் கேத்தரின் விளங்கி வந்த நிலையில், தன் கல்லறையில் ஒரு பெரிய ஆணுறுப்பு சிலையை நிறுவுமாறு தன் இறுதிக் காலத்தில் தன் குடும்பத்தாரிடம்  இறுதி ஆசையை கேத்தரின் பகிர்ந்து வந்துள்ளார்.


முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி கேத்தரின் உயிரிழந்த நிலையில், 5 அரை அடி நீளம் கொண்ட ஆணுறுப்பு சிலையை கேத்தரினின் கல்லறையில் நிறுவி, அவரது ஆசையை குடும்பத்தார்  தற்போது நிறைவேற்றியுள்ளனர்.


மேலும் படிக்க: உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்


Soumya Swaminathan : குரங்கு அம்மை ஒரு அலாரம்போல.. தயார் நிலையில் இருந்தே ஆகணும்.. WHO தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்..


600 பவுண்ட் எடையில் கல்லறையில் ஆணுறுப்பு சிலை


 சுமார் 600 பவுண்ட் எடையில் இந்த ஆணுறுப்பு சிலை கேத்தரினின் கல்லறையில் நிறுவப்பட்டுள்ள நிலையில், ”வாழ்வு மீதான கேத்தரினின் காதல் மற்றும் சந்தோஷத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆணுறுப்பு சிலை நிறுவப்பட்டுள்ளது” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.


இது குறித்து முன்னதாகப் பேசிய கேத்தரினின் பேரன் அல்வரோ மோட்டா லைமன், ”மெக்சிகோவில் சில விஷயங்கள் திறந்த மனது மற்றும் அறிவுடன் அணுகப்படாமல் மூடி மறைத்தே இருந்து வந்தன.


முற்போக்கான பாட்டி... பெருமிதம் தெரிவித்த குடும்பத்தார்


இந்த முன்னுதாரணங்களை என் பாட்டி கேத்தரின் உடைக்க விரும்பினார்.  அவர் எப்போதும் முற்போக்கு சிந்தனையுடனேயே விளங்கி வந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.


மெக்சிகோவின் சிறிய நகரமான மிசாண்ட்லாவில் வசித்து வந்த கேத்தரின், தன் 99ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். இந்நிலையில், தனது ஆணுறுப்புகளின் மீதான ஆர்வத்தால் ஸ்பானிஷ் மொழியில் டோனா காட்டா (பெண் பூனை) என குறும்பான புனைப்பெயரால் சக ஊர்க்காரர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.




மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


Madhya Pradesh: ஒரே ஊசியில் 39 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி... துறை தலைவரின் உத்தரவால் நர்சிங் மாணவர் செய்த கொடூரம்!


Madhya Pradesh: ஒரே ஊசியில் 39 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி... துறை தலைவரின் உத்தரவால் நர்சிங் மாணவர் செய்த கொடூரம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.