Ipad -ஐ பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்திய தாத்தா எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அவரது பேரன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
இன்றைய தலைமுறையினர் தொழில்நுட்ப வளர்ச்சியைப்பார்த்து நம் தாத்தா பாட்டிமார்கள் நிச்சயம் வியப்பில் உள்ளார்கள் என்றுதான் கூற வேண்டும். ஒரு வயது குழந்தை முதல் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் என இன்றைய அனைத்துத் தொழில்நுட்பத்தையும் மிகவும் நேர்த்தியாகவே கையாள்கின்றனர். ஆனால் அவர்களின் தாத்தா மற்றும் பாட்டிமார்கள் இன்னும் ஸ்மார்ட்போன்களைக் கையாள்வதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இருந்தப்போதும் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு தயாராகின்றனர். இதற்காக புதிய ஸ்மார்ட்போன் அல்லது ஐபேட் போன்றவற்றை வாங்கிக்கொள்வதோடு நவீன கேஜெட்டுகளைப் பயன்படுத்த பலரின் உதவியை நாடுகின்றனர். ஆனால் என்ன முழுமையாக கற்றுக்கொள்ளும் முன்பே அவர்களின் முயற்சியைக் கைவிடுகின்றனர். மேலும் தான் பயன்படுத்திய செல்போன்களை வீட்டில் உள்ள யாரிடமாவது கொடுத்துவிடும் போது அவர்கள் எடுத்துள்ள புகைப்படங்களை அதிலிருந்து எப்படி நீக்குவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அதனால்தான் தான் அவர்கள் செய்த சேட்டைகள் அனைத்தும் நமக்கு தெரியவருகிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நிகழ்ந்துள்ளதோடு அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோ தொடக்கதக்தில், புதிய ஐபேடை ஓபன் செய்து கேலரிக்குள் செல்லும் போது, அதில் உள்ள புகைப்படங்களை நாம் பார்க்க முடிகிறது. சில புகைப்படங்கள் தெளிவாக தெரியாவிட்டாலும் மற்றவை சில செல்ஃபிகளாக நமக்கு தெரிகிறது.
அதில் தாத்தா ஐபேடை பயன்படுத்திய சமயத்தில் எடுத்துக்கொண்ட செல்ஃபிகளில் முகம் தெரிவதில்லை. மாறாக அவரது பாதங்கள், கைகள் போன்றவை மட்டும் தான் தெரிகிறது. இந்த வீடியோவைத்தான் அந்த தாத்தாவின் பேரன் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள், நான் இனி புதிய தொழில் நுட்பத்தை விட்டுவிடுகிறேன் எனவும், இந்த புகைப்படங்கள் எல்லாம் நல்லதொரு நினைவுகள் சேமித்துவைக்கவும் என கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். மேலும், இதுபோன்று தாத்தாக்கள் செய்யும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்கக்கூடியது எனவும், நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.