ஃபேஸ்புக் பார்த்தால் கன்னத்தில் அறைவிட வேலைக்கு ஆள் வைத்த நபரைப் பற்றிய ட்வீட்டுக்கு இரண்டு ஃபயர் இமோஜி விட்டு பழைய செய்தியை இன்றைய சென்சேஷனாக்கியுள்ளார் எலான் மஸ்க்.
யார் இந்த எலான் மஸ்க்?
எலான் மஸ்க் (Elon Musk,) தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். கனடா அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) டெஸ்லா மோட்டார்ஸ், மற்றும் ஜிப்2 ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளர் ஆவார். மஸ்க் அவற்றின் இணை நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். தற்போது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். 12 வயதிலேயே, வீடியோ கேம்ஸ்களுக்கு, அவரே கோடிங் எழுதி அதனை விற்று வருவாய் ஈட்டியவர். இப்போதும் கூட உலகளவில் க்ரிப்டோ கரன்சியின் பிரபலத்துக்கு எலான் மஸ்க் அதில் முதலீடு செய்திருப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது. இப்போது, எலான் மஸ்க் இந்த ட்வீட்டுக்கு இரண்டு ஃபயர் இமோஜி விட்டுள்ளதால்கூட க்ரிப்டோ கரன்ஸியின் மதிப்பு பல மடங்கு எகிறும் எனக் கூறப்படுகிறது.
சரி அது என்ன ட்வீட் எனக் கேட்கிறீர்களா?
சரி அது என்ன ட்வீட் எனக் கேட்கிறீர்களா? இந்திய அமெரிக்கரான எலான் மஸ்க் தான் வேலை நேரத்தில் ஃபேஸ்புக் பார்த்து நேரத்தை வீணடித்தால் தன் கன்னத்தில் அறைவிட வேலைக்கு ஒரு ஆள் அமர்த்தியிருந்தார். 2012ல் மணீஷ் சேத்தி என்ற அந்த நபர் கொடுத்திருந்த விளம்பரமே அப்போத் ஊடகங்களில் செய்தியானது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு 8 டாலர் சம்பளம் வழங்கப்படும். வேலைக்கு வருபவர் என்னருகே அமர்ந்து நான் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடித்தால் என்னை எச்சரிக்க வேண்டும். அபோதும் நான் கேட்காவிட்டால் உடனே என் கன்னத்தில் அறைய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்து நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பிக்க மணீஷ் சேத்தி, காரா என்ற நபரை பணிக்கு அமர்த்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் முன்பெல்லாம் எனது வேலைத் திறன் 35% முதல் 40% வரை மட்டுமே இருந்தது. இப்போது காரா என்னுடன் அமர்ந்திருப்பதால் எனது பணித் திறன் 98% ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார்.
இப்போது எலான் மஸ்க் தனது பழைய செய்தி குறித்த ட்வீட்டுக்கு இரண்டு ஃபயர் எமோஜி போட்டுள்ளதை குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான் தான். எலான் மஸ்க் எனக்கு இரண்டு ஃபயர் எமோஜி, கொடுத்துள்ளார். இதைவிட எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடாது. ஆனால், நான் செய்யும் செயல் ஐகாரஸின் செயலைப் போன்றது என்பதையே ஃபயர் எமோஜி உணர்த்துகிறதோ? காலம் பதில் சொல்லும்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஐகேரஸ் என்பது கிரேக்க புராணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். ஐகேரஸ் சிறைப்பட்டிருக்கும் போது அவரது சிற்பி தந்தை மகனை விடுவிக்க மெழுகால் ஆனா சிறகை செய்து கொடுப்பார். அந்த சிறகைக் கொண்டு ஐகேரஸ் பறப்பார். தன்னால் பறக்க முடிந்ததும் பேராசை கொண்டு சூரியனை நோக்கி இகாரஸ் பயணிப்பார். அப்போது சூரியனின் வெப்பத்தில் சிறகை இழந்து கீழே விழுந்து இறந்துவிடுவார். அதையே ஒப்பிட்டு மணீஷ் சேத்தி ட்வீட் செய்துள்ளார்.