அண்டார்டிகா பனிப்பகுதியில் மட்டுமே காணப்படும் அறியவகை அடிலே பென்குயின் நியுசிலாந்தின் க்ரிஸ்ட்சர்ட் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் மட்டுமே காணப்படுபவை அடிலே ரகப் பென்குயின்கள். கண்களைச் சுற்றி வெள்ளைநிற வட்டம் இருக்கும் இந்த வகைப் பென்குயின்கள் சுமார் 10000000 லட்சம் அண்டார்டிகாவின் ராஸ் கடல் பிரிவுப் பகுதியில் வசிக்கின்றன.ஆனால் அதிசயமாக இந்த வகைப் பென்குயின் பறவை ஒன்று அண்மையில் நியூசிலாந்து நாட்டின் க்ரிஸ்ட் சர்ச் கடற்பகுதிக்கு வந்து சேர்ந்தது.






 


ஆல்பட்ராஸ் பறவைகள் காணப்படும் இந்தப் பகுதியில் பென்குயின் ஒன்றை மக்கள் காண்பது இதுவே முதல்முறை.  அண்டார்டிகாவிலிருந்து 3000 கிமீ பயனித்து வந்துள்ள இந்தப் பறவை மிக மோசமான உடல் சூழலில் இருந்தது. இதையடுத்து அந்த ஊரில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது. பென்குயின் தனது இருப்பிடத்திலிருந்து பயணித்து இவ்வளவு தூரம் வந்திருப்பது அதன் வசிப்பிடத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது என பறவைகள் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அண்டார்டிகாவில் அடிலே பென்குயின்கள் எப்படி வசிக்கின்றன என்பதைத் தெரிஞ்சுக்கணுமா? கீழே உள்ள வீடியோவைப் பாருங்க..