இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச இலங்கையிலிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில் கோட்டபய ராஜபக்ச இன்று ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற்றம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் ராஜபக்ச குடும்பத்தினர்தான் என்று கூறி இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இதைத்தொடர்ந்து மாலத்தீவில் கோட்டபய ராஜபக்ச இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
பிரதமரும் பதவி விலக தொடரும் போராட்டம்:
இந்நிலையில் பிரதமர் பதவியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புதிய அதிபருக்கான தேர்தல்:
இந்நிலையில் இலங்கை நாட்டின் சபாநாயகர் கூறுகையில், “இன்றைக்குள் கோட்டபய ராஜபக்ச ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார்” என்றார்.
மேலும் புதிய அதிபருக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்