Most Search Google 2023: கூகுளில் நடப்பாண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட தகவல்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.


கூகுளில் 2023ல் அதிக தேடல்:


நடப்பு ஆண்டிற்கான கூகுள் தேடலில் அதிகம் இடம்பெற்ற படங்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாடல்கள், செய்திகள், நபர்கள் மற்றும் விளையாட்டுகள் தொடர்பான தரவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் திரைப்படங்கள் பிரிவில் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்த ஜவான் திரைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் அதிகம் தேடப்பட்டு முதல் 5 இடங்களை பிடித்த விவகாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


2023-ல் அதிகம் தேடப்பட்ட செய்திகள்:



  • இஸ்ரேல் - காஸா போர்

  • ரைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் விபத்து

  • துருக்கி நிலநடுக்கம்

  • ஹிலாரி சூறாவளி

  • இடாலியா சூறாவளி


2023-ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள்:



  • அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் டாமர் ஹம்லின்

  • அமெரிக்க நடிகர் ஜெர்மி ரென்னர்

  • ஆண்ட்ரூ டாடே - முன்னாள் குத்துச்சண்டை வீரர்

  • கிலியன் எம்பாபே - பிரான்சு கால்பந்து வீரர்

  • டிராவிஸ் கெல்ஸ் - அமெரிக்க கால்பந்து வீரர்


2023-ல் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள்:



  • ஜெர்மி ரென்னர்

  • ஜென்னா ஒர்டேகா

  • இச்சிகாவா என்னோசுகே

  • டேனி மாஸ்டர்சன்

  • பெட்ரோ பாஸ்கல்


2023-ல் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள்:



  • டாமர் ஹம்லின்

  • கிலியன் எம்பாபே

  • டிராவிஸ் கெல்ஸ்

  • ஜா மோரண்ட்

  • ஹார்ர் கேன்


2023-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்:



  • பார்பி

  • ஒப்பன்ஹெய்மர்

  • ஜவான்

  • சவுண்ட் ஆஃப் பிரீடம்

  • ஜான் விக்: சேப்டர் 4


2023-ல் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள்:



  • இண்டர் மியாமி எஃப்சி

  • லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்

  • அல் - நாசர் எஃப்சி

  • மான்செஸ்டர் சிட்டி எஃப் சி

  • மியாமி ஹீட்


2023-ல் அதிகம் தேடப்பட்ட மைதானங்கள்:



  • spotify கேம்ப் நௌ, பார்சிலோனா, ஸ்பெயின்

  • சாண்டியாகோ பெர்னாபு மைதானம், மாட்ரிட், ஸ்பெயின்

  • வெம்ப்லி மைதானம், லண்டன், இங்கிலாந்து

  • டோக்கியோ டோம், ஜப்பான்

  • சான் சிரோ மைதானம், மிலனோ, இத்தாலி


2023-ல் அதிகம் தேடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:



  • தி லாஸ்ட் ஆஃப் அஸ்

  • வெட்னஸ்டே

  • ஜின்னி & ஜார்ஜியா

  • ஒன் பீஸ்

  • கலைடேஸ்கோப்


2023-ல் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள்:



  • ஹாக்வார்ட்ஸ் லெகசி

  • தி லாஸ்ட் ஆஃப் அஸ்

  • கன்னெக்‌ஷன்ஸ்

  • கேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா

  • ஸ்டார்ஃபீல்ட்


இதையும் படிங்க: Most Searched Movie: 2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படம் எது தெரியுமா?


2023-ல் அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞர்கள்:



  • ஷகிரா

  • ஜேசன் அல்டீன்

  • ஜோ ஜோனாஸ்

  • ஸ்மாஷ் மவுத்

  • பெப்பினோ டி கேப்ரி