அமெரிக்காவில் அகதிகள் குடியேற உதவும் குழுவில் கூகுளின் சுந்தர் பிச்சை இடம்பெற்றுள்ளார். 


உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்து மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அந்தவகையில் உக்ரைன் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அகதிகளுக்கு உதவ பிரபல நிறுவனங்களில் சி.இ.ஒக்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கபட்டுள்ளது. 


இந்நிலையில் இந்தக் குழு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையும் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “30 சி.இ.ஒக்களுடன் வெல்கம்.யுஎஸ் என்ற குழுவில் இடம்பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன். இந்தக் குழு ஆஃப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் நாட்டிலிருந்து வரும் அகதிகள் அமெரிக்காவில் குடியேற உதவுகிறது. மேலும் அவர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் நீண்ட கால ஆதரவை தொடரும் வகையில் இந்தக் குழு அமைந்துள்ளது. அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் வேலை உள்ளிட்டவை கிடைக்க இக்குழு உதவும்” எனப் பதிவிட்டுள்ளார். 






வெல்கம்.யுஎஸ் என்ற குழு தனியார் தொழில் நிறுவனங்களின் சி.இ.ஓக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனியார் நிறுவனங்களின் உதவிகளை திரட்டி அமெரிக்காவில் குடியேற வரும் அகதிகளுக்கு உதவுகிறது. இந்தக் குழுவில் தற்போது சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயேன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிராட் ஸ்மித் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர். 


ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தற்போது வரை சுமார் 4.5 மில்லியன் உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1 லட்சம் அகதிகள் வரை அமெரிக்கா அனுமதிக்க உள்ளதாக கூறியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவிற்கு ஆஃப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 75 ஆயிரம் பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண