2022-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ’Goblind Mode’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆல்ஸ்ஃபோர்டு டிக்ஸ்னரி ஆண்டுதோறும் ஒரு வார்த்தையை அறிவிக்கும். இந்தாண்டு முதல்முறையாக உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் மக்கள் ’Goblind Mode’- ஐ தேர்ந்தெடுத்துள்ளனர்.


அதென்ன கோப்ளின் மோட் (Goblin Mode)?


’கோப்ளின் மோட்’ என்பது என்னவென்றால் பொதுவாக உள்ள விதிகள், கட்டுபாடுகள் ஆகியவற்றை நிராகரித்து அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனிநபர் அவரவர் விருப்பமானவற்ற செய்தல், தன் நலன் சார்ந்து சிந்தித்தல்,  சுயவிருப்பம், சோம்பேறித்தனமாக, பேராசையுடன் நடந்து கொள்வது -இவைகளை குற்றவுணர்வு இல்லாமல் தன்னை நேசித்தல் என்று கூட சொல்லலாம்.


ஆக்ஸ்ஃபோர்டு லெக்ஸிகோகிராஃபர்ஸ் மூன்று வார்த்தைகள் தேர்ந்தெடுத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களிடம் கேட்டுள்ளனர். ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் கோப்ளின் மோட் என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளனர். 


’Goblind Mode’ என்ற வார்த்தை 3,18,956 வாக்குகள் பெற்றுள்ளது. 93 சதவீதத்தினர் கோப்ளின் மோட் என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளனர். 


கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கோப்ளின் மோட் எனும் வார்த்தை ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. அதன்பிறகு,  2022ம் ஆண்டில் இந்த வார்த்தை பிரபலமாகி, உலகம்முழுவதும் பரவியது. நடிகை மற்றும் மாடல் பிரபலாமான Julia Fox மற்றும் ரெட்டிட் ஆகியவற்றின்  மூலம் இந்த வார்த்தை பிரபலமானது.






குறிப்பாக, கொரோனா லாக்டவுன் காலத்திற்கு  கோப்ளின் மோட் வார்த்தை வேகமாக எல்லாரிடமும் பிரபலமாக தொடங்கியது.  


ஆக்ஸ்போர்டு மொழிகள் பிரிவின் தலைவர் காஸ்வர் கிராத்வோல் (Casper Grathwohl)கூறுகையில் “ நம் அனுபவத்தில் கிடைத்த  வார்த்தையான கோப்ளின் மோட் என்பதை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையைக தேர்ந்தெடுத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்


இந்த ஆண்டின் வார்த்தை என்பது, இந்த ஆண்டின் மக்களின் எண்ணங்கள், மனநிலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளது. முதல்முறையாக பொதுமக்கள் வாக்கெடுப்பில் 3 வார்த்தைகள் வழங்கப்பட்டு, ஒரு வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 


மெட்டாவெர்ஸ் (Metaverse), ஐஸ்டான்ட்வித்(#IStandWith), கோப்ளின் மோட் (goblin mode) ஆகிய மூன்று வார்த்தைகளில் இருந்து ஒரு வார்த்தை தேர்தெடுத்துள்ளனர் மக்கள்.


இதற்கான கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 93 சதவீத வாக்குகள், அதாவது 3.40 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று கோப்ளின் மோட் வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது.


மெட்டாவர்ஸ் வார்த்தை 14,484 வாக்குகளும் மற்றும் ஐஸ்டாண்ட்வித் என்ற வார்த்தை 8,639 வாக்குகளும் பெற்றுள்ளது. 


கடந்த 2021ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக வேக்ஸ் (VaX) தேர்ந்தெடுக்கப்பட்டது.