இந்தோனேஷியாவில் 52 வயது பெண்ணை உயிருடன் விழுங்கிய பாம்பு, தேடிச் சென்ற உறவினர்கள் அதன் வயிற்றை கிழித்துபெண்ணின் சடலத்தை மீட்டனர்.


பாம்புகள் என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். உலகில் கட்டுவிரியன், ராஜ நாகம், மம்பா போன்ற பாம்புகள் அதிக விஷம் கொண்ட பாம்புகளாக கருத்தப்படுகிறது. இது போன்ற பாம்புகள் கடித்தால் தப்பி பிழைப்பதே கடினம். இது ஒரு புறம் இருக்க விஷம் இல்லாத பாம்புகளால் அபாயம் இல்லை என பொருள் அல்ல, ராட்சஸ பாம்புகளான அனகோண்டா, மலைப்பாம்பு ஆகியவையும் மனிதர்களை கொள்ளக்கூடிய தன்மை கொண்டது. உலகில் 31 வகையான மலைப்பாம்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்த மலைப்பாம்புகள் விலங்குகள் கடத்தல் மூலமாகவே அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கின்றன. இந்த பெரிய வகை பாம்புகள் அதற்கு இரை தேடும் சமயம், இரையை குறி வைத்து அதன் உடலை முறிக்கி விழுங்கிவிடும். இதுபோன்ற சம்பவங்கள் அனகோண்டா போன்ற படத்தில் பார்த்துள்ளோம்.


இந்தோனேஷியா நாட்டில், ஜாம்பி என்ற  பகுதியில் வசித்து வந்தவர் ஜஹ்ரா(52). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அங்குள்ள பிரபலமான ஒரு ரப்பர் தோட்டத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அன்று மாலை அவர் பணி முடிந்து வீட்டிற்குச் செல்லவில்ல்லை என்பதால்  உறவினர்கள் இதுகுறித்து தோட்டத்திற்கு வந்து கேட்டும், உறவினர்கள் வீட்டுகளிலும் விசாரித்து, தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.


இந்த நிலையில்,  ரப்பர் தோட்டத்திற்கு அருகில் ஒரு 16 அடி நீளம் மலைப்பாம்பு உடல் பருமனுடன் எதோயோ விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. ஒருவேளை பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் அடைந்த உறவினர்கள், அதனை கொன்று வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர். அதற்குள், ஜஹ்ரா பிணமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்தோனேசியாவில் மலைப்பாம்பு மனிதர்களை விழுங்குவது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இது போன்று இரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.