உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தையின் தாயே அந்த பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக காரணமாக அமைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டி மேரி சிபில்(36). இவருக்கு 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த மாதம் இவருடைய பெண் குழந்தையை காணவில்லை என்று காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வீடு ஒன்றில் இறந்த நிலையில் அந்த குழந்தை கண்டு எடுக்கப்பட்டுள்ளது. 


அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்தக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது இந்த குழந்தையை அவருடைய தாயே பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. 






அதாவது அக்குழந்தையின் தாய் கிறிஸ்டி மேரி 37 வயது டெரமி வில்லியம்ஸ் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. டெரமி வில்லியம்ஸ் மற்றும் மேரி ஆகியை இருவருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்துள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக அக்குழந்தையின் தாய் கிறிஸ்டி மேரியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 


அவரும் தன்னுடைய குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட உறுதுணையாக இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விசாரணைக்கு சில நாட்களுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தன்னுடைய குழந்தையை இழந்து மிகவும் சோகத்துடன் இருப்பதாக கூறினார். மேலும் தனக்கு நான்கு குழந்தைகள் இருந்தபோதும் பெண் குழந்தை மீது அதிக பாசத்துடன் இருந்ததாக தெரிவித்தார். அவருடைய கண்ணீர் மல்கிய பேட்டி அனைவரையும் உறைய வைக்கும் நிலையில் அமைந்திருந்தது. 


அப்படி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த தாய் பின்பு அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தன்னுடைய குழந்தையை சொந்த தாயே இப்படி சித்திரவதை அனுபவிக்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க:கல்வான் பள்ளத்தாக்கில் சீன கொடி: பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்..