உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று பிரான்ஸ். இந்த நாட்டின் அதிபராக பதவி வகிப்பவர் இமானுவேல் மாக்ரன். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் மாக்ரனும் ஒருவர். இவர் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் தனது மனைவி ப்ரிகிடேவுடன் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வியட்நாம் சென்ற ப்ரான்ஸ் அதிபர்:
வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹானேய்க்கு தனி விமானத்தில் தனது மனைவியுடன் மார்க்ரம் வந்து இறங்கினார். அப்போது, அவருக்காக விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வியட்நாம் அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் தயாராக இருந்தனர். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தின் கதவைத் திறந்தனர்.
கதவைத் திறந்தபோது வெளியில் வருவதற்கு தயாராக மாக்ரன் நின்று கொண்டிருந்தார். அவர் விமானத்தின் உள்ளே இருந்த தன து மனைவி ப்ரிகிடேவிடம் ஏதோ பேச முயற்சித்தார். ஆனால், அவர் அதிபர் மாக்ரனின் முகத்தைப் பிடித்து தள்ளினார். இதை வெளியில் இருந்த பத்திரிகையாளர்களின் கேமராவால் பதிவானது. உடனே வெளியில் இருப்பவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே மீண்டும் மாக்ரன் விமானத்தின் உள்ளே சென்றார்.
வைரலாகும் வீடியோ:
பின்னர், விமானத்தில் இருந்து இறங்கும்போது தனது மனைவியிடம் தனது கையை பிடிக்குமாறு சைகை காட்டினார். ஆனால், அவர் அப்போதும் அதிபரின் கையைப் பிடிக்காமல் சற்று கோபமாக இறங்கிச் சென்றார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ப்ரான்ஸ் அதிபரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
சமாளித்த அதிபர் மாக்ரன்:
அதற்கு பதிலளித்த மாக்ரன் நாங்கள் நகைச்சுவை சொல்லி பேசிக் கொண்டிருந்தோம் என்று கூறி சமாளித்தார். உலகின் சக்திவாய்ந்த நாட்டின் தலைவராக இருந்தாலும் மனைவியிடம் அடங்கித்தான் போக வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ப்ரான்ஸ் அதிபர் வியட்நாம் நாட்டிற்கு பிறகு இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.