Crime : பிரான்ஸில் தினமும் உணவில் போதைப் பொருள் கொடுத்து மனைவியை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த கணவர் உட்பட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


10 ஆண்டுகளாக...


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லி டொமினிக். இவருக்கு திருமணமாகி  மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தெற்கு பிரான்சில் உள்ள அவிக்னான் என்ற பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது மனைவியை வைத்து சுமார் 10  ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


அதாவது 2011ஆம் அண்டு முதல் 2020ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மனைவியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் 91 முறை அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அதன் அனைத்தையுமே வீடியோ எடுத்து வைத்து உள்ளார். 


91 முறை...


அதோடு இல்லாமல் மனைவிக்கு உணவில் லோரஸெபம் (Lorazepam) என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.  தூக்கமின்மைக்காக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனையே லி டொமினிக் தனது மனைவிக்கு கொடுத்துள்ளார்.


கடந்த 10 ஆண்டுகளாக அவரது வீட்டிலேயே மனைவியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளார். சுமார் 83 பேரை இதற்கு ஈடுபடுத்தியுள்ளார். இவர்கள் 26 முதல் 73 வயதுக்கு உட்பட்டவர்கள்  என கண்டறியப்பட்டுள்ளது. 83 பேரில் 51 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது 92 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


நிபந்தனைகள்


கைது செய்யப்பட்டவர்கள் தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர், நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், ஐடி ஊழியர், சிறைக்காவலர், செவிலியர், பத்திரிகையாளர்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு முறையும் கணவர் லி டொமினிக், தனது வீட்டிற்கு வருபவர்களுக்கு நிபந்தனைகளையும் விதித்துள்ளார். அதாவது, புகையிலை, வாசனை திரவியம் போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது.


மேலும், வீட்டிற்கு வரும் ஆண்கள் குளியலறையில் ஆடைகளை அவிழ்ப்பதற்கு பதிலாக சமையலறையில் ஆடைகளை அவிழ்க்க வேண்டும். மனைவியின் அறைக்கு செல்வதற்கு முன்பு வெந்நீரில் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்று பல நிபந்தனைகளை விதித்திருந்தார். அதன்படியே அவரது வீட்டிற்கு வருபவர்கள் லி டொமினிக், மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


இதனை அடுத்து, வாகனங்களை அருகில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வரச்சொல்லி இருந்தார். அதோடு, யாரும் சந்தேகப்படும்படி நடந்துகொள்ளாமல் வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தார் என தெரியவந்தது. இதுகுறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் தங்களுக்கு இதுபோன்று நடப்பது தெரியாது என்றும், அந்த பெண் இவருடைய மனைவிதான் என்றும் தெரியாது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி  இருக்கிறது.  சுமார் 10 ஆண்டுகளாக பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.