5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் விமானத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து பூமிக்கு திரும்பினர்.






விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்கப் பெண்ணான நாசாவின் நிக்கோல் மான் தலைமையில், விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை அதிகாலை விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்ப பயணம் மேற்கொண்டனர். 19 மணி நேரத்தில், விண்வெளி வீரர்கள் பயணித்த டிராகன் காப்ஸ்யூல் தம்பாவிற்கு அருகில் புளோரிடா கடற்கரையில் மெக்சிகோ வளைகுடா பகுதியில் தரையிறங்கியது.  








அமெரிக்க-ரஷ்ய-ஜப்பானியர்களை கொண்ட இந்த குழு கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஐந்து மாதங்கள் தங்கியிருந்தனர். விண்வெளியில் இருக்கும்  குப்பைகளை நீக்குவது மட்டுமல்லாமல், ரஷ்யா காப்ஸ்யூளில் ஏற்பட்ட கசிவுகளை சரி செய்வதும், வேறு குழுவில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு மாற்று காப்ஸ்யூல் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.


” நீண்ட பயணத்திற்கு பிறகு விட்டிற்கு வந்துள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”, என நிக்கோல் மான் தரையிறக்கத்திற்கு பின் தெரிவித்தார்.  ஜப்பானிய விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா சுஷியை சாப்பிட மிகவும் ஆசையாக உள்ளது என கூறினார். அதேபோல் ரஷ்ய விண்வெளி வீராங்கனை அன்னா கிகினா நல்ல சூடான தேநீரை குடிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.   நாசா விண்வெளி வீரர் ஜோஷ் கசாடா அவரது குடும்பத்திற்காக ஒரு மீட்பு நாயைப் பெற வேண்டும் என தெரிவித்தார்.




மேலும் விண்வெளி நிலையத்தில் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள், மூன்று ரஷ்ய வீரரகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் உள்ளனர். ஜப்பானின் விண்வெளிப் பயணச் சாம்பியனான வகாடா, நாசாவின் விண்கலத்தின் கடந்த 5 பயணங்களில் 500 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.