இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயது எல்லையை நிர்ணயம் செய்ய முன்னாள் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல். இலங்கையில் உள்ள முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வயது அதிகரித்திருப்பதை இலங்கையின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் சொல்லாமல் சொல்லிக் காட்டி இருக்கிறார்.அதாவது இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயதெல்லையை குறிப்பிட்ட கால அளவுக்குள் நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். அவ்வாறு வயதெல்லையை மட்டுப்படுத்தினால் மட்டுமே இலங்கை நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் உள்வாங்கப்படுவார்கள் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.


இலங்கைக்கு தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்துவதே மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என  முன்னாள் தேர்தல் ஆணையாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையை அரசியலில் தவறு விடப்பட்ட இடமே இந்த வயதெல்லை தான் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக தற்போது இருக்கும் ராஜபக்சேக்கள் நான்கு பேர்,  அடுத்தது அதிபர் ரணில் விக்ரமசிங்க , மேலும்   பிரதமர் தினேஷ் குணவர்தன என அதில் முக்கியமானவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.


இலங்கையை பொறுத்தவரை தற்போது 75 வயது வரை அரசியல்வாதிகளுக்கு கடமையாற்ற முடியும் என தான் நினைப்பதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். அன்று இளைஞர்களாக அரசியலுக்கு வந்தவர்கள் பலர், 70 வயதை தாண்டியும் இன்றும் இலங்கையில் ஆட்சியில் அமர்ந்து உள்ளதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இளைஞர்களால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என தான் கூறவில்லை எனவும், இளைஞர்கள், எதிர்கால சந்ததியினர் அரசியலுக்கு வருவதற்கு இடமளிக்க வேண்டியது  காலத்தின் கட்டாயம் என முன்னாள் தேர்தல் ஆணையர் வலியுறுத்தி இருக்கிறார்.


குறித்த வயதெல்லையுடன் ஒரு நபர் நான்கு முறை மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு போட்டியிடலாம் என்ற ஒரு வரையறையை விதிக்கலாம் என முன்னாள் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசபிரியா பரிந்துரை திருக்கிறார். மேலும் , தேர்தல் ஆணைக்குழுவின் விருப்பத்துக்கமைய, இலங்கையில் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.


கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே தான் தேர்தல் செயலகத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார். ஆகவே இலங்கை நாடாளுமன்றத்துக்கு ,எதிர்கால இலங்கை அரசியல் சிறக்க வேண்டுமாயின் வயதானவர்கள் வெளியேறி புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் கூறி இருக்கிறார்.அதேபோல் இலங்கையின் சிறந்த எதிர்காலத்திற்கு மக்கள் ஆணையை தேர்தலை வைத்து பெறுவதே தகுந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.