பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி கால்பந்தாட்ட வீரர் அச்ராஃப் ஹக்கிமியின் மனைவி, பாலியல் வன்கொடுமை காரணமாக விவாகரத்து கேட்டு வந்ததோடு, அவரது சொத்தில் பாதியைக் கோரி பிரெஞ்சு நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், வெறுங்கையுடன் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.


ஜீவனாம்சம் கேட்ட மனைவி


36 வயதான அவரது மனைவி ஹிபா அபூக் ஸ்பெயினை சேர்ந்தவர் ஆவார். நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தும் கூட அவரிடம் இருந்து சொத்துக்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொராக்கோவை சேர்ந்த அவரது கணவரான ஹக்கிமியின் வங்கியில் சொத்துகளோ பணமோ இல்லை என்றும் அவர் தனது சொத்துக்களை தனது தாயின் பெயரில் பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளது.



தாயின் பெயரில் சொத்துக்கள்


ஊடக அறிக்கைகளின்படி, ஹக்கிமியின் மனைவி தனது விவாகரத்து கோரிக்கையை பதிவுசெய்து, அவரது செல்வத்தில் பாதியைக் கோரியுள்ளார். ஆனால் அதன் பிறகுதான் எந்த சொத்தும் அவர் பெயரில் இல்லை அவரது தாயின் பெயரில் உள்ளது தெரியவந்துள்ளது. வழக்கறிஞர்களால் விசாரிக்கப்பட்ட பின்னர் 24 வயதான ஹக்கிமி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டதாக பிரெஞ்சு வழக்கறிஞர்கள் மார்ச் மாதம் தெரிவித்தனர். ஹக்கிமி நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாயில் விடுமுறையில் இருந்த அபூக், தனது கணவரைப் பிரிந்து செல்ல முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: கெத்து காட்டிய கோலி… கை கொடுக்காமல் சென்ற கங்குலி… ஜாம்பவான்களிடையே அனல் பறந்த மோதல்..!


அதிக ஊதியம் பெரும் கால்பந்து வீரர்


ஹக்கிமிக்கும் அபூக்கிற்கும் பிப்ரவரி 2020 இல் திருமணம் நடந்துள்ளது. ஹக்கிமிக்கு சட்டப்பூர்வமாக எதுவும் சொத்துக்கள் இல்லை என்றும் PSG அணிக்காக அவர் விளையாடுவதற்கான மில்லியன் கணக்கான சம்பளம் கூட அவரது தாயின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அதிகாரிகள் அபூக்கிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொராக்கோ வேர்ல்ட் நியூஸ் கடந்த ஆண்டு, ஹாக்கிமி அதிக ஊதியம் பெறும் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. அவர் வாரத்திற்கு $2,15,000 (சுமார் ஒன்றே முக்கால் கோடி ரூபாய்) க்கும் அதிகமாக சம்பாதித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.



573 கோடி ரூபாய் சொத்து மதிப்பு


அவரது சம்பளத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகை அவரது தாயின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியபோது அவரது மனைவி ஆச்சரியமடைந்தார். அவர் பெயரில் சொத்துக்கள், கார்கள், நகைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. ஊடக அறிக்கையின்படி, ஹக்கிமியின் சொத்து மதிப்பு $70 மில்லியனைத் (573 கோடி ரூபாய்) தாண்டியுள்ளது. அவர் விரும்பும் அனைத்தையும் வாங்கி அவரது தாயின் பெயரில் பதிவு செய்துள்ளார்.