போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமான பயணமானது நிறுத்தப்பட்டது.
விமான விபத்து:
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் இருந்து போயிங் 737-300 ரக விமானம் , இன்று காலை புறப்பட இருந்தது. அதில் 85 பயணிகள் இருந்ததாக சர்வதேச செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த விமானமானது, "டக்கரின் பிளேஸ் டியாக்னே விமான நிலையத்தில்" இருந்து, மேற்கு ஆப்பரிக்காவில் உள்ள மாலி நாட்டுக்கு புறப்படுவதாக இருந்தது. இன்று காலை புறப்படும் போது, போயிங் 737 விமானமானது ஓடுபாதையில் இருந்து விலகியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து, விமானத்தை, விமானி பாதுகாப்பாக நிறுத்தம் செய்தார்.
விரைந்த அவசர சேவை:
விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர், அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில், விமானிக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி சற்று சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்ததையடுத்து, பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக விமான நிலையத்தில் அவசர சேவைகள் விரைந்து வந்தன. அதையடுத்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தானது விமானியின் கவன குறைபாட்டால் நிகழ்ந்ததா அல்லது வானிலை தாக்கம் ஏதும் இருந்ததா அல்லது தொழில்நுட்ப காரணம் ஏதும் இருந்ததா என்பது குறித்து தெரியவில்லை.
தீவிர விசாரணை:
இந்நிலையில், இந்த சம்பவத்தின் காரணங்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போயிங் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக செனகல் அரசு தரப்பில் தெரிவித்ததாவது, செனகல்லில் இருந்து மாலிக்கு செல்லவிருந்த விமானமானது விபத்துள்ளானது. இந்த விமானத்தில் 79 பயணிகள் இருந்தனர், மேலும் 2 விமானிகள் மற்றும் 4 க்ரு உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர். இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தோர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதர பயணிகள், ஓய்வு எடுப்பதற்காக ஹோட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போயிங் விமானத்தை இயக்கி வரும் ட்ரான்ஸ் ஏர் சேவை நிறுவனமானது விபத்துக்குள்ளானது போன்ற சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் விமானத்தின் பாகங்கள் எரிந்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த வீடியோவானது உண்மையா என்பது குறித்தான தகவல் தெரிவியவில்லை.