23 வயதான நியூசிலாந்து பெண் ஒருவர், மனச்சோர்வுக்காக எடுத்துக் கொண்ட மருந்துகள் தன் உடலை கொஞ்சம் கொஞ்சமாக எரித்து, தான் இறக்கும் அளவிற்கு சென்றதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


என்ன ஆனது..?


இதுகுறித்து நியூசிலாந்து அவுட்லெட் ஸ்டஃப் தெரிவிக்கையில், “ சார்லோட் கில்மோர், ஸ்டீவன்ஸ்-ஜான்சன் என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இது அவரது தோல், வாய் மற்றும் உணவுக்குழாயில் கொப்புளங்களை உருவாக்கி அதிகப்படியான வலியை கொடுத்தது” என்று தெரிவித்தது. 


மயோ கிளினிக்கின்படி, SJS (ஸ்டீவன்ஸ்-ஜான்சன் நோய்) முதலில் உடலில் காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் பரவ தொடங்கும். அதைத்தொடர்ந்து, உடலின் உட்புறத்தின் கொப்புளங்கள் வெடிக்க தொடங்கி பரவும். இது பெரும்பாலும் 19% நோயாளிகளுக்கு பெரிய அளவிலான ஆபத்தை விளைவிக்கும். 


இது உலகளவில் ஒரு மில்லியனில் ஒருவரை மட்டுமே பாதிக்கும். மனச்சோர்வில் இருந்து வெளிவர, லாமோட்ரிஜின் என்ற ஆண்டிபிலெப்டிக் மருந்து கொடுக்கப்படுகிறது. இது ஒரு சில பேருக்கு அரிதாக பக்க விளைவை ஏற்படுத்தும்.” என்று குறிப்பிட்டது. 


இந்த பக்கவிளைவு குறித்து பேசிய 23 வயதான கில்மோர், “ இந்த நோய் என்னை பாதித்தபோது நான் கண்ணாடியில் பார்த்தேன். கண்ணீர் வடித்து அழுதேன். இது மிகவும் தீவிரமான நோய் ஒன்று என்று என் ஆழ்மனதில் பயத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக, நேரடியாக மருத்துவமனைக்கு சென்றேன். என்னை சோதித்த மருத்துவ ஊழியர்கள், இது என்ன மாதிரியான பாதிப்பு என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்று கூறினர். 


இதில், கொடூரமான விஷயம் என்னவென்றால் இந்த நோய் உடலுக்குள் உள்ளிருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக எரிக்க தொடங்கியது. அதன் தாக்கம் வெளிப்புற தோலிலும் பாதிப்பை வெளிப்படுத்தியது. இது தோல் மற்றும் வாயை மட்டுமல்ல, இது அவரது செரிமான அமைப்பு முழுவதும் வலி கொப்புளங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மருத்துவர்கள் எனக்கு ஊட்டச்சத்துகளை வழங்க உணவுக் குழாயை செலுத்தினர். 


டிஸ்சார்ஜ்:


30 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நவம்பர் மாதம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கில்மோர். தற்போது, இவர் வீடு திரும்பினாலும், அவ்வப்போது இந்த நோயின் தாக்கம் ஏற்படுகிறது என்றும், உடலில் எறிச்சல் இருக்கிறது என்றும் தெரிவித்தார். 


தோல் சொறி அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தும் ஒரு ஒவ்வாமை எதிர்வினையானது லாமோட்ரிஜினின் அறியப்பட்ட பக்க விளைவு ஆகும். இது ஆஸ்திரேலியாவில் மனச்சோர்வு மற்றும் கால்-கை வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வழங்கப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தோல் எரிச்சல் குறையும். இருப்பினும், நோயாளிகள் உடனடியாக மருந்துகளை நிறுத்தவும், அவை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.