sunita williams Return: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பியதும் எடுக்கப்பட்ட, சுனிதா வில்லியம்ஸின் புன்னகையுடன் கையசைத்தார்.

பூமியில் சுனிதா வில்லியம்ஸ்: 

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரையில் டிராகன் காப்ஸ்யூல் கீழே விழுந்த கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தரைப்படையினரின் உதவியுடன் நாசா விண்வெளி வீரரும் க்ரூ-9 தளபதியுமான நிக் ஹேக், டிராகன் காப்ஸ்யூலில் இருந்து முதல் நபராக வெளியே வந்தார். ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் இரண்டாவது நபராக வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வம்சாவலியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அடுத்தடுத்து விணகலத்தில் இருந்து வெளியே வந்தனர். மீட்பு மற்றும் காப்ஸ்யூல் குளிர்விப்பு நடைமுறைகளை தொடர்ந்து, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் கால் பதித்தனர்.

 

வைரலாகும் வீடியோ:

காப்ஸ்யூலில் இருந்து இன்முகத்துடன் சிரித்தபடி வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ், அங்கிருந்தவர்களை நோக்கி கையசைத்தார். தொடர்ந்து அனைவரையும் பார்த்து சிரித்தார்.தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக காப்ஸ்யூலைச் சுற்றி நீந்திக் கொண்டிருந்த டால்பின்களால் அவர்கள் வரவேற்கப்பட்டனர். பின்னர் மீட்புக் கப்பல் மூலம் அந்த விண்கலம் மீட்கப்பட்டு, விண்கலத்தில் இருந்து ஒவ்வொருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விண்வெளி புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் வாழ்ந்ததால், புவி ஈர்ப்பு விசையை ஏற்று அவர்களால் உடனடியாக நடக்கமுடியவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

க்ரூ-10 ஆல் விடுவிக்கப்பட்ட பிறகு விண்வெளியில் இருந்து புறப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட 17 மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் கீழே விழுந்தனர். விண்வெளி வீரர்கள் 45 நாள் மறுவாழ்வு திட்டத்திற்காக ஹெலிகாப்டரில் ஹூஸ்டனுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.