பாலியல் ஆரோக்கிய வல்லுநர்களான சின்ஃபுல் நிறுவனம் கடலுக்குள் கலந்து கடல்நீரை அசுத்தப்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செய்யப்பட்ட பலவிதமான செக்ஸ் பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை மெல்லிய அடுக்கில் பட்டு போன்ற மென்மையான சிலிகானால் உருவாக்கப்பட்ட கவர்களில் விற்பனைக்கு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் இந்த செக்ஸ் டாய்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்வது அறமல்ல என்பதால் இது போன்ற முன்னெடுப்பை எடுத்துள்ளனர். இவர்களுடைய ஒவ்வொரு தயாரிப்பு பொருட்களும் செக்ஸ்-டாய்ஸ் துறையில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான உரையாடல்களைத் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் செல்லும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதிலும் அதனை கொண்டு உபயோகமான பொருளை செய்வதிலும் முன்னணியில் இருக்கும் டைட் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய விஷயத்தை சின்ஃபுல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.



டைட் நிறுவனத்தில் உள்ள நிபுணர்கள் குழு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பிளாஸ்டிக்கை சேகரித்து வருகிறது. 100% மறுசுழற்சி செய்யப்பட்ட கடலில் பிணைக்கப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து பொருள் தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், இது தயாரிப்பதற்காக தொழிற்சாலைகளில் செய்யப்படும் முழு செயல்முறையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் மட்டுமே இயக்கப்படுகிறது என்பது கூடுதல் அம்சம்.






இந்த தயாரிப்புகளின் உற்பத்திக்கு தலைமை தாங்கிய இந்த நிறுவனத்தின் இணை உரிமையாளர் மதில்டே மக்கோவ்ஸ்க் பேசுகையில், “ஓஹெசியன் என் மனதிற்கு நெருக்கமான ஒரு திட்டம். இன்பத்தை நிலையான அணுகுமுறையுடன் இணைக்கும் ஒரு தயாரிப்பை உலகிற்கு வழங்குவதற்கு எங்கள் முழு குழுவும் நீண்ட காலமாக கடினமாக உழைத்து வருகிறது. எங்கள் நிறுவனத்திற்கு இது ஒரு நீண்ட கால செயல்முறை. இது ஒரு ஆரம்பம் மட்டுமே, இதன் முதல் அலையைத் தொடங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிளாஸ்டிக் சேகரிப்பு ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மூன்று வகையான செக்ஸ் பொம்மைகள் இதன் மூலம் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் இன்னும் பல வகை செக்ஸ் டாய்ஸ் இதன்மூலம் செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டுள்ளன. அந்த லட்சியத்துடன்தான் நிறுவனம் இயங்கி வருகிறது", என்று குறிப்பிட்டார்.