துணிசிய நாட்டில் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் 8 செ.மி. அளவில் கல் இருந்ததாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து பார்த்த மருத்துவர்களுக்கு அதனைவிட பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாகவும் ஒரு செய்தி பரபரப்ப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் வியக்கும் வகையில் பல செய்திகள் உலகெங்கிலும் இருந்து நம்மை வந்து அடைகின்றன. சில செய்திகளை கேட்கும்போது பதைப்பதைக்கும். அது போன்ற ஒரு நிகழ்வுதான் துனிசியா எனப்படும் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் நடந்துள்ளது. அந்த நாட்டு மருத்துவர்களே வாயடைத்து போன சம்பவம்தான் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாளாக பிறப்புறுப்பில் வலியை அனுபவித்து வருவதாக மருத்துவமனைக்கு வந்த பெண்ணை பரிசோதித்தபோது உள்ளே கல் இருந்துள்ளது. அதனை அறுவை சிகிச்சை செய்து எடுத்த மருத்துவர்களுக்கு ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும் அந்த கல்லை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
4 வருடங்களாகவே அந்த பெண் அடிக்கடி சிறுநீர் கழித்து வந்துள்ளார். அதற்கான காரணம் தெரியாமல் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவருக்கு நாளடைவில் வலி அதிகமாகி வந்துள்ளது. எனவே மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இது சாதரணமாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய பாதிப்பு போன்று தெரியவில்லை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். ஸ்கேன் செய்து பார்த்ததில், அவர் சிறுநீரகத்திற்குள் 8 செ.மி. அளவில் ஒரு பெரிய கல் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே உடனடியாக அந்த கல்லை வெளியில் எடுப்பதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். வெற்றிகரமாக இரு கற்களை எடுத்த உடன், அதோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு கிளாஸ் சில்லும் கிடைத்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இத்தனை நாள் இவற்றை எப்படி அவர் உள்ளே வைத்துக்கொண்டு பிழைத்து இருந்தார் என்றும், இது எப்படி உள்ளே சென்றது என்றும் வியந்து அதிசையித்தனர்.
துணிசியா சிட்டியில் உள்ள எஸ்ஃபேக்ஸ் நகரத்தில் ஹபீபா போர்கிபா பல்கலைக்கழக மருத்துவமனையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "அந்த பெண்ணின் சிறுநீர்ப்பையில் 8 சென்டிமீட்டர் கல் இருந்துள்ளது. அந்த கல்லின் உள்ளே கண்ணாடி இருந்தது. அது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் நுழைந்து சிறுநீர்ப்பையை அடைந்திருக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், சில வருடங்களுக்கு முன்னர் தனக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டார் அந்த பாதிக்கப்பட்ட பெண். அப்போது இந்த பாட்டில் உள்ளே செலுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்த பெண் குறிப்பிடுகிறார். இருப்பினும், இந்த தகவலை அந்த பெண் உறுதியாக கூறவில்லை. பின்னர் விசாரித்ததில் அந்த பெண், தண்ணீர் அருந்தும் க்ளாஸ் டம்ளரை செக்ஸ் டாயாக பயன்படுத்தியதாகவும், அதனை வெளியில் கூற பயந்து சிகிச்சைக்கு வராததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.