கத்தார் தலைநகர் தோஹாவில் இந்திய தூதர் தீபக் மிட்டலை தலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தலிபான் தரப்பின் வேண்டுகோளின் பேரில் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்ததாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இந்திய தூதர் தீபக் மிட்டல் தலிபானின் முக்கிய தலைவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இது ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு நடைபெறும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் பல தொடர்பில் இருந்த ஆப்கானிஸ்தானின் துறைகள் இனி என்ன ஆகும் என்ற பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்திருக்கும் என்று தெரிகிறது. பொருளாதார ரீதியிலான தொடர்புகள் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து இந்தியா முடிவெடுக்கும். ஆனால் தலிபான்கள் இந்தியாவின் தொடர்புகளை இழக்க விரும்பவில்லை.



தலிபானின் தோஹா அலுவலகத்தில் தலிபான் தலைவர் மொஹமது அப்பாஸ் ஸ்டேன்க்ஸாயை இந்திய தூதர் தீபக் மிட்டல் அழைப்பின் பேரில் சென்று சந்தித்தார்.


தலிபான்கள் பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளதால் முன்பிலிருந்தே அதன் மீது ஒரு கண் வைத்திருந்தது இந்தியா. ஆப்கனிஸ்தானில் எஞ்சியிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தே இந்த சந்திப்பில் பேசப்பட்டது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரானவர்கள் யாரேனும் ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி இந்தியாவில் தாக்குதல் நடத்தும் வாய்பிருப்பதால் அதுகுறித்த அச்சத்தையும் உரையாடினோம் என்று மிட்டல் தெரிவித்தார். ஆனால் அந்த தவறு நடைபெறாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என உத்தரவாதம் தந்ததாக கூறினார்.


இந்தியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதார தொடர்பை மேம்படுத்திக்கொள்ளும் முனைப்பில் உள்ளதாக ஆப்கன் மீடியாக்கள் எழுதியதுதான் இந்த சந்திப்பிற்கான புள்ளி. இந்தியாவுடன் பேசியது குறித்து உடனடி அறிவிப்புகளை எதுவும் தலிபான் வெளியிடவில்லை. முன்பிருந்த காபுல் அரசாங்கத்துடன் இந்தியா வைத்திருந்த பொருளாதார ஒப்பந்தத்தின்படி மூன்று பில்லியன் டாலர்களை வளர்ச்சி நிதியாக முதலீடு செய்திருந்தது. ஆனால் தற்போது தலிபான்கள் ஆக்ரமித்துவிட்டமையால் தலிபான்களை தொடர்பு கொள்ளாதது குறித்து இந்தியர்கள் அரசை விமர்சித்து வருகின்றனர்.



ஜூன் மாதத்தில் தலிபான் தலைவர்களுடன் தோஹாவில் அதிகாரபூர்வமற்ற தொடர்பை இந்தியா ஏற்படுத்தி இருந்தது என்று அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன. இந்திய தூதர் மிட்டல் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் பயன்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 1996-ஆம் ஆண்டு முதல் 2001 வரை தாலிபான்கள் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது, ரஷ்யா, ஈரானுடன் இணைந்து இந்தியாவும் ஆயுதம் ஏந்திய வடக்கு கூட்டணியை எதிர்த்தனர். ஆப்கானிஸ்தான் அதிகாரியாக இந்திய ராணுவத்தில் பயிற்சிபெற்ற ஸ்டேன்க்ஸாய், கடந்த மாதம் இந்தியாவை அணுகி, தூதரகத்தை மூட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.