உலக நாடுகளை கொரோனா வைரஸ் மீண்டும் சிறையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. கொரோனாவில் தொடங்கி வைரஸில் தொடங்கி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான், டெல்மைக்ரான் என வைரஸானது உருமாற்றம் அடைந்து வருகிறது. உலக அளவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அடுத்த வைரஸ் இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் ஃப்ளுரோனா எனும் இரட்டை உருமாற்ற வைரஸை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதால், ஃப்ளுரோனா வைரஸ் எனும் பெயர் வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவைவ் நகரில் உள்ள ராபின் மருத்துவ மையத்துக்கு பிரசவத்துக்காக ஒரு பெண் சென்றார். அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ், இன்ஃப்ளூயன்ஸா இரண்டும் இணைந்த ஃப்ளுரோனா வைரஸ் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கர்ப்பிணிப் பெண் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாளேடான யேதியோத் அஹ்ரோநோத் தெரிவி்த்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் டெல்டா வைரஸ், ஒமிரான் வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கொரோனா வைரஸும் தாக்கினால் வரக்கூடியது ஃப்ளுரோனா என்று இஸ்ரேல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் நாலா அப்தெல் வஹாப் இதுகுறித்து கூறுகையில், “ ஃப்ளுரோனா வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இரு வைரஸ்கள் மனிதர்களை ஒரே நேரத்தில் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் கடுமையாக பாதிக்கும்” எனத் தெரிவித்தார்.
உலகில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் மக்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக பூஸ்டர் டோஸைச் செலுத்தி வருகின்றன. ஆனால், இஸ்ரேல் அரசு, தங்கள் மக்களில் மிகவும் பலவீனமானவர்களுக்கு நான்காவது தடுப்பூசியையும் செலுத்தத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: என்னால்தான் செத்தார்களா?’ : "பிரதமருக்கு திமிர்" : சந்திப்பு சண்டையில் முடிந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்திய மேகாலயா ஆளுநர்...