பூமிப் பந்தில் ஒரு நாட்டில் பகல் இருக்கும் வேளையில், இன்னொரு நாட்டில் இரவு இருப்பது இயற்கை. இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் பசிபிக் நாடுகள் சிலவற்றில் இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 31) பிற்பகலே புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில் உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என்கிற விவரங்களை பார்க்கலாம். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன் முதலாக புத்தாண்டு பிறக்கிறது. அதாவது, அந்த நாடுகளில் அந்த நேரத்தில் 2020 ஜனவரி 1 அதிகாலை 12 மணி ஆகிவிடுகிறது. அதே போல இந்திய நேரப்படி நாளை காலை, 5.30 மணிக்கு இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாடப்படும். ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு இருக்கும். இந்த நாடுகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரம் வருமாறு:
3:45 pm: சாதாம் தீவுகள்
4:30 pm: நியூசிலாந்து
5:30 pm: ரஷ்யாவின் ஒரு பகுதி
6:30 pm: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா
7 pm: அடிலைய்டு, புரோக்கன் ஹில், செடுனா
7:30 pm: பிரிஸ்பேன், போர்ட் மோர்ஸ்பை, ஹகத்னா
8 pm: டார்வின், அலைஸ் ஸ்பிரிங்ஸ், டெனண்ட் கிரீக்
8:30 pm: ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல்மட்
9:30 pm: சீனா, பிலிப்பைன்ஸ்
10:30 pm: இந்தோனேசியா, தாய்லாந்து
11 pm: மியான்மர்
11:30 pm: வங்கதேசம்
11:45 pm: நேபாளத்தின் காட்மண்ட், பொக்காரா, பிரட் நகர், டாரன்
12:00 am: இந்தியா, இலங்கை
12:30 am: பாகிஸ்தான்
1 am: ஆப்கானிஸ்தான்.
தொடர்ந்து அஸெர்பைஜன், ஈரான், மாஸ்கோ, கிரீஸ், ஜெர்மனி, பிரேசில், நியூஃபவுன்லேண்ட் ஆகிய நாடுகள் கொண்டாடுகின்றன. இந்திய நேரப்படி ஜனவரி 1, 9:30 am to 1:30 pm வரை கனடா, அமெரிக்கா தொடர்ந்து, மார்கொயஸாஸ், அமெரிக்கன் சமோவா ஆகிய நாடுகள் கொண்டாடுகின்றன.
ஜனவரி 1, 5:50 pm: பேக்கர் தீவு. இதுவே புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடு.
ஆக, இந்திய நேரப்படி இன்று பிற்பகலே உலகில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. இப்போது தொடங்கி நாளை மாலை வரை புத்தாண்டை ஒவ்வொரு நாடாக கொண்டாட தொடங்கும். தமிழகத்தில் ஓமைக்ரான் தீவிர பரவல் காரணமாக இரவு நேர வாகங்களுக்கு 12 மணிக்கு மேல் தடை செய்யப்பட்டிருப்பதால், அனைவரும் பாதுகாப்புடன் புத்தாண்டை வீட்டிலேயே கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.