பின்லாந்து நாட்டு பிரதமர் சன்னா மரீன் தனது நண்பர்களுடனான பார்ட்டி ஒன்றில் மது போதையில் டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகிறது.


சன்னா மரீன்


பின்லாந்து நாட்டில் ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் கட்சியின், பிரதமராக 34 வயதாகும் சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர். உக்ரைன் ரஷ்யா போரை அடுத்து, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான, 'நோட்டோ'வில் ஸ்விடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணையும் ஒப்பந்தத்திற்கு, மிக தீவிரமாக உழைத்து வருவதன் மூலம் அனைவராலும் அறியப்படுகிறார்.



பின்லாந்து நாடு


பின்லாந்து கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் புகழ்பெற்ற நாடு.  இங்கு உள்ளா கல்வி திட்டங்கள், பற்பல நாடுகளில் முன் மாதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன. பலரும் அங்கு சென்று அவர்களது கல்வி முறை குறித்து அறிந்து கொண்டு செல்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: காவல் துறையின் அவசர எண்ணுக்கு அழைத்த சேட்டைக்கார குரங்கு... அமெரிக்காவில் சுவாரஸ்ய சம்பவம்!


பார்ட்டியில் ஆட்டம்


உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமை உள்ள சன்னா மரீன் தன் அடுக்குமாடி குடியிருப்பில, தனது நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்றுக் கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பொறுப்பின்றி மது அருந்தி, நடனம் ஆடலாமா என்று சன்ன மரீனுக்கு பலரும் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.






ஏற்கனவே எழுந்த சர்ச்சைகள்


கடந்த 2020 ஆம் ஆண்டில் பேஷன் இதழ் ஒன்றுக்கு, லோ கட் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த போட்டோ வெளியான போது, அப்போதும் அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என்று கண்டன குரல்களும் தொடர்ந்து வெளிவந்தன. இந்த நிலையில் பிரதமர் சன்னா மரீன் போதையில் ஆட்டம் போட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளதை அடுத்து சன்னா மரீன் பிரதமர் பதவிக்கு, அவமரியாதையும் களங்கத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பின்லாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.