சோஷியல் மீடியாவில் செம ஆக்டீவாக இருப்பவர் தொழிலதிபர் எலன் மஸ்க். குறிப்பாக ட்விட்டரில். உலகத்தில் என்ன நடந்தாலும் அது தொடர்பாக ட்வீட் செய்வதும் அதனை பேசுபொருளாக்குவதுமே அவரது ஸ்டைல். இந்நிலையில், பிட்காயின் பற்றி அவர் பதிவிட்டிருக்கும் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.


அவர் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்திருக்கிறார். அந்த படத்தில், சாம்சங், டோஷிபா, நகாமிச்சி, மோட்டரோலா, நகா ஆகிய நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு சுட்டி காட்டியிருக்கிறார். இந்த நிறுவனங்களின் பெயர்கள், பிட்காயின் நிறுவனர் சத்தோஷி நகமோட்டோவின் (Satoshi Nakamoto) பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்பதை சுட்டிகாட்டுவதாக இருக்கிறது. 






விவரத்தை தெளிவாக சொல்லாமல், மறைமுகமாக புகைப்படத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறார் மஸ்க். இது இப்போது பேசு பொருளாகியுள்ளது. மஸ்க்கின் இந்த கருத்தை, ட்விட்டர் வாசிகள் அலசி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும், அவர்களுக்கு தெரிந்த கதைகளை சொல்லி வருகின்றனர். பின் காயின் நிறுவனர் சத்தோஷி நக்கமோட்டோவைச் சுற்றி விவாதம் எழுத்துள்ளது. ஏற்கனவே, பிட்காயின் அறிமுகம் செய்யப்பட்டது குறித்து முன்னுக்கு பின் முரணான கருத்துகள் இருந்து வரும் நிலையில், மஸ்க் ஒரு புதிய செய்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்.










முன்னதாக, எலன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் பொருள்களை வாங்கவேண்டும் என்றால் இந்த மெய் நிகர் நாணயமான பிட்காயினை பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தார். அதனையடுத்து அதிகளவில் மக்கள் பயன்படுத்தியதால் டெஸ்லா நிறுவனத்தின் பொருள்கள் எல்லாம் தாறுமாறாக உயர்ந்தது. மேலும் இதன் காரணமாக பிட்காயின் மதிப்பும் சந்தையில் அதிகரிக்க தொடங்கியது. 


இந்த அறிவிப்பை வெளியிட்ட சில காலங்களிலேயே, டெஸ்லா நிறுவனத்தில் பொருட்கள் வாங்க பிட்கானை பயன்படுத்தமுடியாது எனவும், பிட்காய்ன் ஏற்கப்படாது எனவும் ட்விட்டரில் அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில், பிட்காயினின் மதிப்பு சந்தையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண