இன்று த்ந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பாகக்ளின் சிறப்பையும், உழைப்பையும், அப்பாக்களின் அளவில்லா அன்பை சிறப்பிக்கும் வகையில் டூடுள் GIF ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இதில் தந்தை தங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் உறுதுணையுடன் இருப்பது போன்று வடிமைத்துள்ளது.
வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூள் வெளியிடுவது வழக்கம். போலவே, இந்தாண்டு உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு டூடுளை வெளியிட்டிருக்கிறது.
தந்தையர் தினத்தை முன்னிட்டு கூகுள் உலகில் உள்ள தந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
கூகுள் கூறுகிறது, “அவர்கள் உங்கள் அருகில் இருந்தாலும் அல்லது தொலைவில் இருந்தாலும், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள். இந்த டூடுள் மூலம் உங்கள் இதயத்திலிருந்து வாழ்த்துகளை கூறலாம். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்! உங்களுக்கும் தந்தைக்குமான நினைவுகளை எண்ணி மகிழ்திருங்கள் என்று கூறியுள்ளது.
தந்தைகள் சூப்பர் ஹீரோக்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தை உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் கடினமாக உழைக்கிறார்கள். தந்தையர் தினம், அவர்களை அங்கீகரிக்கும், மகிழ்விக்கும் கொண்டாட்டமாகும். தந்தையர் தினம் என்பது நம் மனதை வடிவமைக்கும் மற்றும் நமது கனவுகளுக்கு சிறகுகளை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அன்பான தந்தையர்களுக்கானது.
கூகுள் வெளியிட்டிருக்கும் GIF-ல் அப்பாவின் கைப்பிடித்து செல்லும் படம், ஒரு பேப்பரில் அப்பாவும் தந்தையும் தங்களது உள்ளங்கைகளால் பேப்பரில் வண்ண ஓவியம் தீட்டுவது போன்ற படங்களை வைத்துள்ளது.
தந்தையர் தினத்துக்கு வித்திட்ட அமெரிக்க சிறுமி
1910ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் தந்தையர் தினம், உலகின் அனைத்து மரபுகள் மற்றும் பிராந்தியங்களிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தந்தையர் தினம் முதலில் எவ்வாறு தோன்றியது என ஆராய்ந்தால், அதன் வேர்கள் அமெரிக்க போர் வீரர் ஒருவரது மகளின் நியாயமான சிந்தனையில் அடங்கியுள்ளது.
அமெரிக்க போர் வீரரான வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மகள் சோனோரா. வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் வசித்து வந்த சோனோராவின் தாய், தனது ஆறாவது குழந்தையை பெற்றெடுத்தபோது உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, சோனோரா தான் தனது இளைய சகோதரர்களை தனது தந்தையுடன் இணைந்து வளர்த்து வந்துள்ளார்.
போர் வீரராக இருந்து கொண்டு தனது தந்தை, தான் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளுக்காகவும் செய்யும் தியாகங்களைப் பார்த்து வளர்ந்த சோனாரா, அன்னையர் தினம் குறித்த பிரசங்கம் ஒன்றை உள்ளூர் தேவாலயம் ஒன்றில் கேட்டுள்ளார்.
இந்தியாவில் தந்தையர் தினம்
உலகின் பல பகுதிகளிலும் தந்தையர் தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியா இந்நாளை இன்னும் பெரிதாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் நாட்டின் மெட்ரோ நகரங்கள் தந்தையர்கள் தினத்தை சிறப்பாகவே கொண்டாடி வருகின்றன. அனைத்து மனிதர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய இந்நாள் விரைவில் இந்தியாவிலும் பெரிய அளவில் கொண்டாடப்படும் என எண்ணுவோம்!