ஹாங்காங்கில் உள்ள மோங் காங் எனும் இடத்தில் உள்ள விலை உயர்ந்த டிசைனர் பொம்மைக் கடை ஒன்றுக்கு, செங் என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.


குழந்தையின் சேட்டையால் நிகழ்ந்த விபரீதம்


அப்போது அவரது 5 வயது நிரம்பிய மூத்த மகன், அங்கிருந்த பிரபல ’டெலிடப்பீஸ்’ எனப்படும்  கார்ட்டூன் பொம்மையுடன் விளையாடியுள்ளார். அப்போது குழந்தை எதிர்பாராத விதமாக பொம்மையை எட்டி உதைத்ததில் பொம்மை கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.


1.8 மீட்டர் உயரம் கொண்ட இந்த  பொன்னிற பொம்மை உடைந்த நிலையில், 33,600 ஹாங் காங் டாலர்கள் (இந்திய விலைப்படி 3,32,000 ரூபாய்) கட்டுமாறு கடை நிர்வாகத்தினர் செங்கிடம் தெரிவித்துள்ளனர்.


மேலும், விலை உயர்ந்த பொம்மை ரகங்களுள் ஒன்றான அந்த பொம்மையின் விலை 5,22,000 ரூபாய் என்றும், தாங்கள் 3,32,000 மட்டுமே கட்டுமாறு கேட்பதாகவும் கடை நிர்வாகத்தினர் செங்கிடம் கறார் காட்டியுள்ளனர்.


இதையும் படிங்க: Watch Video: கூண்டுக்குள் விரல்வித்தைக் காட்டிய நபர்! படாரென பாய்ந்து விரலைக் கடித்துத் துப்பிய சிங்கம்!


3.32 லட்சத்தைக் கறந்த கடை!


அதனைத் தொடர்ந்து செங்கும் வேறு வழியில்லாமல் 3,32,000 ரூபாய் கட்டிவிட்டு கடையை விட்டு வெளியேறியுள்ளார்.


செங்கின் சேட்டைக்கார குழந்தை பொம்மையுடன் விளையாடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.



கடை நிர்வாகம் விளக்கம்...


இந்நிலையில், தன் குழந்தை பொம்மையை உடைக்கவில்லை என்றும், வீடியோவில் குழந்தை பொம்மையை வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும், கடைக்காரர்கள் தன்னை ஏமாற்றி 3,32,000 ரூபாய் கறந்து விட்டதாகவும் செங் தற்போது குற்றம் சாட்டி வருகிறார்.


இதனைத் தொடர்ந்து இது குறித்து விளக்கமளித்துள்ள கடை நிர்வாகம், பொம்மையின் விற்பனை விலையை விட தாங்கள் செங்கிடம் அதிகம் வசூலிக்கவில்லை என்றும், உடைந்த பொம்மை இதுவரை எந்த வாடிக்கையாளருக்கும் இடையூறாக இருந்ததில்லை என்றும், தாங்கள் பொம்மைகளை பாதுகாப்பாக வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


இதையும் படிங்க: Oxfam Report: கொரோனாவால இவங்க கோடீஸ்வரர்கள் ஆனாங்க.. விவரங்களை புட்டு புட்டு வைத்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண