அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடல் அலையில் மார்க் சுக்கர்பெர்க் சாகசம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது. 


அமெரிக்கா சுதந்திர தினம் :


உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரும் டெக்னாலஜி உலகில் வல்லமை படைத்தவருமான மார்க் சுக்கர்பெர்க், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் சி. இ.ஓ-வாக பணியாற்றி வருகிறார்.


இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகள் பெரும் வைரலாகும். இந்நிலையில், இவரின் சமீபத்திய பதிவுகள் பெரும் வைரலாகியுள்ளது.  நேற்றைய தினத்தில் ( ஜூலை 4 ) , அமெரிக்காவில் 248 வது சுதந்தர தினமானது அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை அமெரிக்க நாட்டினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து விமர்சையாக கொண்டாடினர்.  


கடல் அலையில் சாகசம்:


இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் சுக்கர்பெர்க், வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். அவர் சீறி வரும் கடல் அலையில் , சர்விங் செய்து கொண்டே, ஒரு கையில் மதுவையும் மற்றொரு கையில் தேசிய கொடியையும் ஏந்தி கொண்டு கொண்டாடும் காட்சிகளை பார்க்க முடிகிறது.  






இந்த வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சுமார் 6.55 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஊடக பயனர்கள் கமெண்ட் பதிவில் தெரிவித்துள்ளதாவது, முந்தைய ஆண்டுகளைப் போலவே, அவர் மீண்டும் சர்ஃபிங் செய்து, கொடியை அசைத்து, பீர் கேனுடன் ரசித்து விளையாடியுள்ளார் என ஒரு பயனர் தெரிவித்திருக்கிறா. மற்றொருவர் தெரிவிக்கையில், பல திறமைகளை கற்று வைத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.