Moscow-Goa Flight Bomb Threat: வெடிகுண்டு மிரட்டலுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையால் பயணிகள் உள்பட 244 பேர் பாதுகாப்பாக உள்ளதாக ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. 


மாஸ்கோவில் இருந்து கோவா செல்லும் அஸூர் ஏர் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து இந்திய அதிகாரிகள் எச்சரித்ததாக ரஷ்ய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 
"மாஸ்கோவில் இருந்து கோவா செல்லும் அஸூர் ஏர் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் ஜாம்நகர் இந்திய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக உள்ளனர்; பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்து வருவதாக ரஷ்ய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


முன்னதாக திங்களன்று (09/01/2023), விமானம் குஜராத்தின் ஜாம்நகருக்கு திருப்பி விடப்பட்டது, கோவா ஏர் டிராபிக் கன்ட்ரோலருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.






கோவா ஏடிசிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாஸ்கோ-கோவா  விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு திருப்பி விடப்பட்டது. "விமானம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜாம்நகர் விமான நிலைய இயக்குனரின் கூற்றுப்படி, "இரவு 9:49 மணிக்கு விமானத்தில் இருந்த 244 பயணிகள் பாதுகாப்பாக ஜாம்நகர் (பாதுகாப்பு) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டனர். தற்போது, ​​விமானம்   தனிமைப்படுத்தப்பட்டு/பாதுகாப்பில் உள்ளன."






கோவா செல்லும் மாஸ்கோ  விமானத்தில் இருந்த 244 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஜாம்நகர் மாவட்ட ஆட்சியர் சவுரப் பார்கி தெரிவித்தார்.


"விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும்  236 பயணிகளும் 8 பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானத்தில் இருந்த 244 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, விமான நிலையத்தின் முனைய கட்டிடத்திற்குள் உள்ள ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார். விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.