எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் சரக்குக்கப்பலை 550 டாலர் இழப்பீடு தொகையினைக்கொடுத்து 100 நாட்களுக்குப்பிறகு அதன் உரிமையாளர் மீட்டுள்ளார்.


உலக அளவில் மிகப்பெரியப் பரபரப்பினை ஏற்படுத்தியது ராட்சத சரக்குக்கப்பல். சுமார் 2 லட்சம் எடைக்கொண்ட இந்தக்கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் தான் கடந்த மார்ச் 23-ஆம் தேதி எகிப்தின் சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தப்போது பலத்த காற்று வீசியதால் கப்பல் கால்வாயின் குறுக்காகத்திரும்பி மணலில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் கடல்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக உலகின் மிக முக்கியக்கடல் வரத்தகப்பாதையான சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கப்பலால் நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்ததோடு, கடல் வர்த்தகமும் முழுமையாக பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து தான் கப்பலை எப்படி மீட்பது?  மற்றும் பொருளாதார இழப்பினை எவ்வாறு சரிசெய்வது? என்று யோசித்த எகிப்து அரசு, தைவானைச்சேர்ந்த கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷாவிடம் சுமா் 6 ஆயிரத்து 600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால் இதற்குக் கப்பல் உரிமையாளர் ஒத்துழைக்காமல் இருந்த நிலையில் பல கட்டப்பேச்சுவார்த்தைகள் நடத்தியப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில் தான் எகிப்து அரசு, சூயஸ் கால்வாயின் தெற்குப் பகுதியான சீனாய் தீபகற்ப பகுதியை, கிழக்கு நோக்கி 44 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தவும், அதேபோல் கால்வாயின் ஆழத்தை 66 அடியிலிருந்து 72 அடியாக ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்ட இரண்டாவது வழித்தடத்தை 10 கி.மீ அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாகவும், இதனால் இரண்டு வழித்தடங்களும் சேர்ந்து, மொத்தம் 82 கி.மீ அளவுக்கு நீளம்கொண்டதாக கால்வாய் அமையவுள்ளதால் மிகப்பெரிய கப்பல்கள் முதற்கொண்டு அதிக அளவிலான கப்பல்கள் மிக எளிதாகப்பயணம் செய்து கால்வாயினைக்கடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அரசு தெரிவித்து வந்தது. இந்தக் காரணத்தினால் தான்  விரைவில் எவர்கிரீன் கப்பலின் உரிமையாளர் கப்பலை மீட்க மற்றம் இழப்பீடு தொகையினை விரைவில் செலுத்தவேண்டிய நிலை கப்பல் உரிமையாளருக்கு ஏற்பட்டது.



எனவே கப்பலை மீட்பது குறித்து தொடர்ந்து எகிப்து அரசு கப்பல் உரிமையாளர்களிடம் பேசி வந்தது. இதனையடுத்து கப்பலின் உரிமையாளர்களுடன் கடந்த சில வாரங்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் 550 டாலர் இழப்பீடு வழங்கப்பட்டதையடுத்து 100 நாட்களுக்குப்பிறகு ராட்சத சரக்குக் கப்பலை எகிப்து அரசு விடுவித்தது.  குறிப்பாக மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையில் தான் 12 சதவீதம் வர்த்தகம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கால்வாயில் சிக்கிய கப்பலால், கிட்டத்தட்ட கால்வாயின் இருபுறமும் 160 கப்பல்கள் செல்லவழியின்றி அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.