கடந்த ஒருவாரமாக சூயஸ் கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த கப்பல் ஒருவழியாக நடுப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு இயந்திரங்கள் மூலம் கரைப்பகுதிகள் தோண்டப்பட்டு, கப்பல் நகர்த்தப்பட்டது. இதனால் சூயஸ் கால்வாய் பகுதியில் விரைவில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயை கடக்க முயன்ற போது திடீரென் திரும்பி கால்வாயை முழுமையாக அடைத்தது. இதனால் அப்பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.