கடந்த மார்ச் 11-ஆம் தேதி லண்டனில் உள்ள கிறிஸ்டியில் ஏலம் நடந்தது பீப்பிளின் மிக விலையுயர்ந்த படைப்பு ஒன்று விற்கப்பட்டது. அதை வாங்கியவர்கள் ரூபாய். 504 கோடிக்கு வாங்கியவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த் வெங்கடேஸ்வரனும், விக்னேஷ் சுந்தரேசனும்தான். 





விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் ஆனந்த் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்கள். பீப்பிளின் மிக விலையுயர்ந்த இந்த படைப்பை வாங்கப் போகிறார்கள் என்பதை கனவிலும் நினைத்தது இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். “நாங்கள் இந்த படைப்பை வாங்கிய தருணத்தை எங்களால் மறக்கமுடியாது கலை  வரலாற்றில் ஒரு இடம் பிடிக்கப்போகிறோம் என்பதை நங்கள் அறியவில்லை .பீப்பிள் எனப்படும் கலைஞரின் 5,000 படங்களின் படத்தொகுப்பு இனி எங்களுடையது என்பதை நம்பமுடியவில்லை. நாங்கள் எங்கள் இணைய பக்கத்தை refresh செய்துகொண்டே இருந்தோம்” என்றார்.






”ஆரம்பகாலத்தில்  காலத்தில் ஒரு லேப்டாப் கூட வாங்கிக்கொள்ளமுடியாத நிலையில்தான் இருந்தேன், எனது நண்பர்களின் லேப்டாப்பை அவர்கள் தூங்கிய பின்பு எடுத்து கோடிங் கற்று கொண்டேன் . பிட்காய்ன் பிளாக்செயின் எனப்படும் கிரிப்டோகரன்சி போன்ற அனைத்தையும் கற்றுக்கொண்டேன் . ஆரம்பத்தில் நான் செய்வதை யாரும் ஏற்கவில்லை. நானும் எனது நண்பன் ஆனந்த்தும் முழுமூச்சில் இந்த வேளையில் பங்கு கொண்டோம். எனது அனைத்து நேரங்களையும் பிட்காயின் கம்பெனி வாங்குவதில் செலுத்தினேன். முன்பு நான் ஒரு தோற்றுப்போன என்ஜினீயர், இன்று ஒரு பில்லினியர்” என்று விக்னேஷ் சுந்தரேசன் கூறினார் .