நியூசிலாந்து செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் வெள்ளிக்கிழமை காலை துபாயில் இருந்து புறப்பட்டநிலையில், 13 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த பின்னும், விமானம் மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறங்கிய வேடிக்கையான சம்பவம் நடந்தேறியுள்ளது.


துபாயில் கிளம்பி துபாய்க்கே வந்த விமானம்


Fox News இன் அறிக்கையின்படி, EK448 விமானம் உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணியளவில் துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9,000 மைல் பயணத்தின் பாதியிலேயே பைலட் யு-டர்ன் செய்துள்ளார். கடைசியில் சனிக்கிழமை நள்ளிரவில் விமானம் துபாயில் தரையிறங்கியது. ஆக்லாந்து விமான நிலையத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வார இறுதியில் விமான நிலையம் மூடப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.






விமான நிலைய அதிகாரிகள் பதிவு


ஆக்லாந்து விமான நிலைய அதிகாரிகள் ட்விட்டரில், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் பயணிகக் பாதுகாப்பே முக்கியமானது" என்று கூறி ஒரு வீடியோவை பதுவு செய்துள்ளனர். "ஆக்லாந்து விமான நிலைய சர்வதேச முனையத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக இன்று எந்த சர்வதேச விமானங்களும் இயக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் பயணிகளின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை" என்று அவர்கள் கூறினர்.


தொடர்புடைய செய்திகள்: TN Weather Update: உஷார் மக்களே... 13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:தமிழ்நாட்டில் கனமழை இருக்கு...!


சர்வதேச விமானங்கள் புறப்படாது


மேலும், ஜனவரி 29 ஆம் தேதி காலை 5 மணி வரை எந்த ஒரு சர்வதேச விமானமும் புறப்படாது என்று அவர்கள் கூறினர். விமான நிலைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், "ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை ஆக்லாந்து விமான நிலையத்திற்கு சர்வதேச பயணிகள் வரமாட்டார்கள்." என்று குறிப்பிட்டனர்.






ஆக்லாந்தில் கடுமையான மழை


சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளின்படி விமான நிலையம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விமான நிலையத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிபிசியின் கூற்றுப்படி, ஆக்லாந்து கடந்த வெள்ளிக்கிழமை " மிக மோசமான மழையை" கண்டது. நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரத்தில் இந்த வாரம் அதிக கனமழை பெய்யும் என்பதால் அவசரகால நிலை தொடர்கிறது. கடுமையான வெள்ளத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மக்கள் இடுப்பளவு நீரில் சிக்கித் தவிப்பதை சமூக ஊடகங்களில் காணொளிகள் காட்டுகின்றன.