Elon Musk Sells X: போதும்பா..! டிவிட்டரை விற்கும் எலான் மஸ்க், ரூ.2.82 லட்சம் கோடியாம்..! வாங்குவது யார் தெரியுமா?

Elon Musk Sells X: எக்ஸ் எனப்படும் டிவிட்டர் தளத்தை விற்கப்போவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

Elon Musk Sells X: எக்ஸ் எனப்படும் டிவிட்டர் தளத்தின் தற்போதைய மதிப்பு, 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.82 லட்சம் கோடி ஆகும்.

Continues below advertisement

ட்விட்டரை விற்கும் எலான் மஸ்க்:

தொழிலதிபரும் உலக பெரு பணக்காரருமான எலான் மஸ்க், தனது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான xAI, தனது சமூக வலைதளமான X-ஐ ( முன்பு ட்விட்டர்)  33 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது” என அறிவித்தார். இந்த நடவடிக்கையானது,  xAI-யின் மேம்பட்ட AI திறன் மற்றும் நிபுணத்துவத்தை X-ன் மிகப்பெரிய வரம்போடு கலப்பதன் மூலம் மகத்தான ஆற்றலைத் திறக்கும்" என்று மஸ்க் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார். 600 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள X தளத்தின் எதிர்காலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட xAI உடன் "பின்னிப்பிணைந்துள்ளது" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

விற்பனை ஏன்?

மஸ்க்கின் அறிவிப்பில், " தரவு, மாதிரிகள், கணக்கீடு, விநியோகம் மற்றும் திறமை ஆகியவற்றை இணைக்க நாங்கள் அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கிறோம். இது உலகைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், மனித முன்னேற்றத்தை தீவிரமாக துரிதப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்க எங்களுக்கு உதவும்” என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் இணைக்கப்படுகின்றன.  xAI-ன் மதிப்பு $80 பில்லியனாகவும், X-ன் மதிப்பு  $33 பில்லியனாகவும் உள்ளது.

2022ல் டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்:

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மஸ்க் டிவிட்டரை,  $44 பில்லியனுக்கு வாங்கினார். அதில் நிலுவையில் இருந்த நிறுவனட்தின் கடனும் அடங்கும். அதன்பிறகு ட்விட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றி, ஏராளமான அப்டேட்டுகளையும் வழ்னக்கினார்.  மேலும் 2023ம் ஆண்டு xAI ஐ அறிமுகப்படுத்தினார். இதற்காக உயர்நிலை என்விடியா சிப்களை பயன்படுத்த பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டார். அதன்படி கடந்த பிப்ரவரியில் xAI அதன் சாட்போட்டின் சமீபத்திய எடிஷனான Grok 3 ஐ வெளியிட்டது. இது ChatGPT மற்றும் சீனாவின் DeepSeek போன்றவற்றால் மிகவும் போட்டி நிறைந்த துறையில் கவனத்தை ஈர்க்கும் என எலான் மஸ்க் நம்புகிறார். அதன் விளைவாகவே தற்போது இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதாக அறிவித்துள்ளார்.

மஸ்க், கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்ட அதன் முன்னோடியை விட 10 மடங்கு கணக்கீட்டு வளங்களைக் கொண்ட, க்ரோக் 3 ஐ "பயங்கரமான புத்திசாலி" என்று விளம்பரப்படுத்தியுள்ளார். க்ரோக் 3, ஓபன்ஏஐயின் சாட்போட்டான சாட்ஜிபிடிக்கு எதிராகவும் போட்டியிடுகிறது. முன்னாள் கூட்டாளியாக இருந்து, தற்போது பரம போட்டியாளரான சாம் ஆல்ட்மேனுக்கு எதிராக மஸ்க்கை நிறுத்துகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola