எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, ட்விட்டர் சமூகம் ஒரே குழப்பத்தில் தான் உள்ளது. ஆரம்பத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முழு ஆர்வம் காட்டிய எலான் மஸ்க், பின்பு அதில் உள்ள போலிக் கணக்குகள் தொடர்பான முழு விவரங்களை தன்னிடம் சமர்பிக்கவில்லை எனக் கூறி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.


இதன் காரணமாக எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைதொடர்ந்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். அன்று தொடங்கி தற்போது வரை எலான் மஸ்க்,  எப்போது எந்த குண்டை தூக்கி போடுவார் என்ற பரபரப்பிலேயே ட்விட்டர் பயனர்கள் உள்ளனர்.


மனித மூளைக்குள் சிப்


உலகம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதன்படி தொழில்நுட்பங்கள்  வளர்ந்து கொண்டு இருக்கிறது. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அதன்படி மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி மனிதர்கள் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இது பலரது மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


எலான் மஸ்கின் நியூரலிங்க், என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மனித மூளைக்குள் கணினி சிப்களை பொருத்தும் நடவடிக்கை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. கம்பியூட்டர் சிப் பொருத்தும் பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. 




கம்பியூட்டர் சிப் பொருத்தும் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் எனக் கூறப்படுகிறது.  மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களின் தலைமுடியயை விட சிறிய கம்யூட்டர் சிப்கள் மூளையில் பொருத்தப்பட உள்ளது. மனிதன் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்த இருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார். இந்த சோதனையானது இன்னும் ஆறு மாதங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறல்


முன்னதாக இந்த சிப்பை வைத்து குரங்கின் மூளையில் பொருத்தி சோதித்த வீடியோவை எலான் மஸ்க் வெளியிட்டிருந்தார். அதில் குரங்கு வீடியோ கேம் விளையாடிய காட்சி இருந்தது. இந்த வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்து.  இதனை தொடர்ந்து நியூராலிங்க நிறுவனம் 2018-ஆம் ஆண்டு முதல் விலங்கின் மூளையில் சிப்களை பொறுத்தி சோதனை செய்தது.





அந்த சோதனையில், விலகுகளை துன்புறுத்தியதாக அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன்படி, விலங்குகள் பரிசோதனையானது வேகமாக நடத்தப்பட்டு, கடுமையாக துன்புறப்பட்டதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் பரிசோதனைகளில் இதுவரை 280க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.