Elon Musk To Be US President: 2023ல் என்னென்ன நடக்கும் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் கணித்த சில விஷயங்களை தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஆகும் எலான்மஸ்க்:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருங்கியவரான முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், இந்த வாரம் ஒரு புதிய பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அடுத்த ஆண்டு ஜெர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போர் மற்றும் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் எனவும் அது எலன் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக வழிவகுக்கலாம் என்றும் கணித்துள்ளார்.
தற்போது, புடினின் ஆலோசனை பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவராக மெட்வடேவ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் புடின் பிரதமராக பதவி வகித்த நான்கு ஆண்டு கால ஆட்சியின் போது ஜனாதிபதியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணிப்புகள்:
அவரது தனிப்பட்ட டெலிகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளின் பட்டியலில், பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதையும் அவர் முன்னறிவித்தார். மேலும், இங்கிலாந்து திரும்பிய பிறகு ஐரோப்பிய ஒன்றியம் சரியும்; யூரோ பழைய ஐரோப்பிய ஒன்றிய நாணயமாக பயன்படுத்தப்படாமல் போகும். மேலும், போலந்தும் ஹங்கேரியும் முன்பு இருந்த உக்ரைனின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமிக்கும்.
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும். அதன் விளைவாக டெக்சாஸ் சுதந்திர மாநிலமாக மாறியது. டெக்சாஸ் மற்றும் மெக்சிகோ ஒரு கூட்டணி அரசை உருவாக்கும். பல மாகாணங்களில் எலான் மஸ்க் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார், இது புதிய உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு இது நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மெட்வெதேவின் சில கணிப்புகளையும் விமர்சித்தாலும், "எபிக் த்ரெட்!!" என்று மீண்டும் ட்வீட் செய்வதன் மூலம் அவர் அமெரிக்க அதிபராக வருவார் என்ற கணிப்புக்கு எலான் மஸ்க் பதிலளித்தார். அமைதி ஒப்பந்தத்தில் உக்ரைன் பிரதேசத்தை ரஷ்யாவிற்கு வழங்க முன்மொழிந்ததற்காக மஸ்க்கை கடந்த காலத்தில் மெட்வெடேவ் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.