இணையத்தை ஆக்கிரமிக்கும் க்யூட் விலங்குகளின் பட்டியலில் யானைகள் மிக முக்கியமானவை.
நேரில் பார்க்கும்போதாகட்டும், வீடியோக்களாகட்டும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை!
மண்ணை வாரி இறைப்பது தொடங்கி, குளிப்பது, சரிந்து மலைச்சரிவுகளில் இறங்குவது என யானைகளின் ஒவ்வொரு க்யூட்டான செயலும் இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.
அச்சுறுத்தும் யானைகள் தவிர்த்து இணைய வீடியோக்களை ஆக்கிரமிக்கும் யானைகள் தங்களின் க்யூட்டான நடவடிக்கைகளால் நெட்டிசன்களை என்றுமே கவர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
அந்த வகையில் யானை ஒன்று டூரிஸ்ட் பஸ் ஒன்றை நிறுத்தி அதில் ஏற முயற்சிக்கும் வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.
திபன்ஷா கப்ரா எனும் ஐபிஎஸ் அலுவலர் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், யானையின் க்யூட்டான செய்கை இணையவாசிகளைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
இதேபோல் காட்டு யானையிடம் மாட்டிய கார் படும்பாடு அடங்கிய திக் திக் வீடியோ ஒன்று முன்னதாக இணையத்தில் வெளியாகி ஒருபுறம் அதிர்ச்சியையும், மற்றொருபுறம் ட்ரோல்களையும் பெற்றது.
Buitengebieden எனும் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் தன் உடலில் ஏற்பட்ட அரிப்பால் யானை உடலை காரில் தேய்த்துக் கொண்டுள்ளது.
ஆனால் காரின் உள்ளே இருப்பவர்களின் நிலைமை கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உடல் அரிப்பால் கார் பேனட்டில் உட்கார்ந்து தேய்த்தும், தன் பெரிய கால்களை காரின் டயரில் வைத்து தேய்த்து கார் மீது ஏறவும் யானை முயற்சிக்கும் இந்த வீடியோ ஒருபுறம் சிரிப்பை வரவழைத்து மறுபுறம் பயத்தையும் அளித்துள்ளது.
இறுதியாக தப்பித்தோம் பிழைத்தோம் என தன் சேதாரமான காருடன் ஓட்டுநர் உயிரைக் கையில் பிடித்தபடி ஓட்டிவரும் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளியது.
இதேபோல் முன்னதாக பானிபூரி கடை ஒன்றில் நின்று சரசரவென அடுத்தடுத்து பானிபூரிகளை யானை ஒன்று சாப்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூரில் இந்த வீடியோவில், பாகனும் வரும் யானை, அடுத்தடுத்து பானிபூரிகளை தும்பிக்கையை நீட்டி கேட்டு வாங்கி உண்ணும் வீடியோ இணையத்தில் சரமாரியாக லைக்ஸ் அள்ளியது.