பசுபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகள் மடாங் நகருக்கு அருகில் உள்ள கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். 


முன்னதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு, சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. அதன் பின்னர் தற்போது “இந்த மோசமான சூழ்நிலை” மாறிவிட்டதாகவும், இருப்பினும் ஒரு சில கடலோர பகுதிகளில் கடல் மட்டம் ஏற்ற இறக்கங்கள்" இருக்கலாம் என்றும் தெரிவித்தது. கைனந்து நகரத்திலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் 61 கிலோமீட்டர் (38 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.






இதுகுறித்து அமெரிக்க பத்திரிக்கையாளர் செக் மில்லர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பப்புவா நியூ கினியாவில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு கண்டறிந்துள்ளது; சுனாமி அச்சுறுத்தல் குறித்து NOAA எச்சரிக்கை விடுத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். 


கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பப்புவா நியூ கினியா நாடு இன்று 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சந்தித்துள்ளது. அதன்படி, 31 100 கி.மீ. 1989 ஆம் ஆண்டில், செப்டம்பர் 10, 2022 நிகழ்விலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் M 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதே இதுவரை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. 


அண்டை நாடான இந்தோனேசியாவில் கடந்த 2004 ம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மிகப்பெரிய சுனாமியை உண்டாக்கியது. இதன் காரணமாக இந்தோனேசியாவில் சுமார் 220,000 பேர் பலியாகினர்.