ஆப்கானிஸ்தானை உலுக்கியுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.


பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே, கோஸ்ட் நகர்த்திலிருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கம் மிக வலிமையாகவும் நீண்ட அளவில் இருந்ததாகவும் காபூல் நகரத்தை சேர்ந்தவ ஒருவர் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரபட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 


தற்போது வெளியான புகைப்படங்களில், ஆப்கானிஸ்தானில் வீடுகள் தரைமட்டமாகி இருப்பதை காணலாம். 






 


பெரும்பாலான உயிரிழப்புகள் பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கு 100 பேர் உயிரிழந்ததாகவும் 250 படுகாயம் அடைந்ததாகவும் தலிபான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நசீம் ஹக்கானி தெரிவித்துள்ளார்.


 






கிழக்கு மாகாணங்களான நங்கர்ஹார் மற்றும் கோஸ்டிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண