இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. 


சுமத்ரா தீவின் பெங்குலு பகுதியில் இருந்து தென்மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவில் நேற்றிரவு 8.30 மணியளவில் கடலில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள எங்கனோ தீவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், "அங்கு நிலநடுக்கம் பலவீனமாக உணரப்பட்டது" என்று தெரிவித்தனர். 


இதுவரை சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. ஆனால் நாங்கள் இன்னும் மதிப்பீடு செய்து வருகிறோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.


2018 ஆம் ஆண்டில், இதே தீவில் உள்ள பாலு பகுதில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 2,200 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2004ஆம் ஆண்டில் ஏஸ் மாகாணத்தில் 9.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் 17ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.


முன்னதாக, கடந்த வாரம் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் இது ரிக்டர் அளவு கோலில் 5.4ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு விழுந்தன. இதனால் சத்தம் கேட்டு அலறி அடித்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினர்.


International Men's Day: என்னது? இன்னைக்கு ஆண்கள் தினமா? இந்த நாளை எதுக்கு கொண்டாடுறாங்க தெரியுமா?


பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான இஸ்லாமாபாத்தில் இருந்து 303 கிலோமீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் நவம்பர் 1 அன்று ஏற்பட்டது. 


நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?


பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் என்பர். நமது பூமியின் லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு  டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. இந்த தட்டுகள் பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகளாகும். அவை கண்டம் மற்றும் கடல்சார் லித்தோஸ்பியரால் ஆனவை.


UN Meeting : "பாகிஸ்தானின் கெட்ட பழக்கம் இது.." ஐ.நா. கூட்டத்தில் வெளுத்துவாங்கிய இந்தியா..!


அதாவது, பூமியின் மேற்பரப்பு, மலைகளும், குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும், ஆறுகளும், கடல்களும் நிறைந்தது. கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் தட்டுகளாக படிகின்றன. இதே செயல்முறை ஆண்டுதோறும் நடப்பதால் டெக்டோனிக் தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிகின்றன.


இந்த டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். அத்தகைய எதிர்வினை அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை  உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.


பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.