Earth To Get New Mini Moon: 2024 PT5 என்ற சிறுகோள் பற்றிய தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
பூமிக்கு புதியதோர் துணைக்கோள்:
ஒரு அரிய நிகழ்வாக, இந்த ஆண்டு செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை நமது கிரகத்தின் நிலவு ஒரு புதிய "மினி-நிலா" உடன் சேர்ந்து பயணிக்க உள்ளது.அதன்படி, பூமிக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு இரண்டு நிலவுகள் இருக்க உள்ளன. 2024 PT5 என பெயரிடப்பட்ட இந்த துணைக்கோள், ஆகஸ்ட் 7, 2024 அன்று ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) ஐப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. ATLAS என்பது NASA-வின் நிதியுதவி பெற்ற சிறுகோள் தாக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பாகும். இருப்பினும், இந்த மினி நிலவு சந்திரனைப் போல நிரந்தர இயற்கை செயற்கைக்கோள் அல்ல, மாறாக தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட பறக்கும் அமைப்பாகும்.
துணை நிலவுகள் அமைவது எப்படி?
பூமிக்கு அருகில் உள்ள பல பொருள்கள் (NEOs) குறைந்த சார்பு வேகத்துடன் நமது கிரகத்தை நெருங்கிய வரம்பில் அணுகுகின்றன. இந்த NEOக்கள் மினி-மூன் நிகழ்வுகளுக்கு உட்படுகின்றன, அப்போது அவ தனது சொந்த புவி மைய ஆற்றலை பல நாட்கள், மாதங்களுக்கு இழக்கின்றன. சில சமயங்களில் அதன் ஆற்றல் எதிர்மறையாக கூட மாறுகிறது. இந்தக் காலக்கட்டத்தில், அந்தப் பொருள்கள் பூமிக்குக் கட்டுப்பட்டிருக்கும் போது ஒரு சுழற்சியை கூட முடிக்காமல், குதிரைக் காலணிப் பாதைகளைப் பின்பற்றி, கிரகத்தைச் சுற்றி வருகின்றன.
இதேபோல், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2024 PT5 குதிரை காலணி பாதையைப் பின்பற்றி, செப்டம்பர் 29 முதல் நவம்பர் 5 வரை மினி நிலவாக மாறும். 53 நாட்களுக்குப் பிறகு, சிறுகோள் அதன் வழக்கமான சூரிய மையப் பாதைக்குத் திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாதியில் விட்டுச் செல்லும் துணைக்கோள்:
அமெரிக்க வானியல் அமைப்பின் ஆய்வுக் குறிப்புகளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சிறுகோள் வெறும் 10 மீட்டர் (33 அடி) விட்டம் கொண்டது. Carlos de la Fuente Marcos மற்றும் Raul de la Fuente Marcos ஆகியோரால் எழுதப்பட்ட இந்த அறிக்கை, NEO களின் எண்ணிக்கையில் இருந்து அடிக்கடி சிறுகோள்களை கைப்பற்றி, அவற்றை தனது சுற்றுப்பாதையில் இழுத்து, சிறுகோள்களை மினி நிலவுகளாக மாற்றும் பூமியின் போக்கு குறித்து குறிப்பிட்டுள்ளது. தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட ஃப்ளைபைகள் ஒரு சுழற்சியை கூட முடிக்க முடியாது என்றாலும், மற்ற தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட ஆர்பிட்டர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை முடிக்க முடியும்.
பூமியால் கைப்பற்றப்பட்ட முந்தைய NEOக்கள்:
ஜூலை 2006 இல், 2006 RH120 என்ற பெயரிடப்பட்ட தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட ஆர்பிட்டர், ஜூலை 2007 வரை ஒரு வருடம் பூமியுடன் பிணைந்திருந்தது. மேலும் 2020 CD3 பல ஆண்டுகளாக பூமியுடன் பிணைக்கப்பட்ட பின்னர் மே 2020 இன் ஆரம்பத்தில் தப்பித்தது.
கடந்த காலங்களில் தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட பறக்கும் கோள்களுடன் பூமியும் சேர்ந்துள்ளது. 1991 VG பிப்ரவரி 1992 இல் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதன்பின், 2022 NX1, இது 1981 மற்றும் 2022 இல் குறுகிய கால மினி நிலவாக இருந்து பூமியைச் சுற்றி வந்தது. ஆனால் ஒரு சுற்றுப்பாதையை முடிக்கவில்லை. அந்த துணைக்கோள 2051-ல் மீண்டும் ஒரு அரை சுற்றுக்கு பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது.
2024 PT5 பற்றிய கூடுதல் விவரங்கள்:
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அப்பல்லோ-கிளாஸ், NEO 2024 PT5 ஆனது 2022 NX1ஐப் பின்பற்றிய பாதையை ஒத்திருக்கிறது. 2020 CD3, 2006 RH120, 1991 VG மற்றும் 2022 NX1 ஆகியவற்றை விட இது அளவில் பெரியது ஆகும். 2024 PT5 செயற்கைகோளை போன்று இருக்க வாய்ப்பில்லை. காரணம், "அதன் குறுகிய கால இயக்கவியல் பரிணாமம் 2022 NX1, உறுதிப்படுத்தப்பட்ட இயற்கைப் பொருளை ஒத்திருக்கிறது". பொருளின் சுற்றுப்பாதை பண்புகள் அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து பூமியை நோக்கி வரும் சிறுகோள்களின் பண்புகளை ஒத்திருக்கின்றன என, ஆர்என்எஸ்எஸ் அறிக்கை தெரிவித்து இருக்கிறது.