வழக்கமாகவே வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப், சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்த தான் தான் காரணம் எனக் கூறிவருகிறார். இந்நிலையில், இந்தியா அமெரிக்காவிற்கு விதிக்கும் வரி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.
ட்ரம்ப் கூறியது என்ன.? - ஜெய்சங்கரின் மறுப்பு என்ன.?
தேஹா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசும்போது, இந்தியாவில் விற்பனை செய்வது கடினம் என்றும், தற்போது அவர்கள் எங்களுக்கு வரிகளே இல்லாமல் ஒரு ஒப்பந்தத்தை வழங்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், வர்த்தக பேச்சுவார்த்தைக்காக நாளை வாஷிங்டன் செல்ல உள்ள நிலையில், ட்ரம்ப் இவ்வாறு கூறியத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ட்ரம்ப் பேசிய நில மணி நேரங்களிலேயே அதற்கு பதில் கொடுத்துள்ள இந்திய வெறியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்குமிடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் சிக்கலானவை என்றும், இன்னும் எதுவுமே இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக பேச்சுவாத்த்தைகள் நடந்து வருகின்றன. அவை சிக்கலான பேச்சுவார்த்தைகள். எல்லாம் முடியும் வரை எதுவும் இறுதி செய்யப்படுவதில்லை என்றும், எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தமும், பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கும் வேலை செய்ய வேண்டும். அது செய்யப்படும் வரை, அது குறித்த எந்த ஒரு தீர்ப்பும் முக்கூட்டியே எடுக்கப்படாது என்றும் அவேர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையோ, அவர் நிர்வாகத்தையோ குறிப்பிடாமல், பொதுவாக ஜெய்சங்கர் கூறியுள்ள இந்த கருத்து, ட்ரம்ப்பின் பேச்சுக்கான பதில் தான் என்பது தெரிகிறது.
மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக பேசிய ட்ரம்ப
இதேபோல், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து மீண்டும் பேசியுள்ளார் ட்ரம்ப். கத்தாரில் நடந்த ஒரு வணிக மன்ற நிகழ்வில் பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து மீண்டும் பேசிய அவர், “இதை நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன், ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை தடுக்க நான் உதவினேன்“ என கூறியுள்ளார்.
மேலும், மோதலை தடுத்து நிறுத்த, இரு நாடுகளுடனும் வர்த்தகம் குறித்து பேசியதாகவும் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். “வர்த்தகம் குறித்து பேசினோம், போருக்கு பதிலாக வர்த்தகம் செய்வோம் என்று கூறினேன்“ என தெரிவித்துள்ளார்.
இருநாடுகளும் இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக மோதிக்கொள்வதாகவும், அதைக் கூட தன்னால் நிறுத்த முடியும் என்றும், தன்னால் எதையும் நிறுத்த முடியும் என்றும் ட்ரம்ப் பேசியுள்ளார்.
இப்படி, அவ்வப்போது வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்துவிடும் ட்ரம்ப்புக்கு, இந்தியாவும் உடனுக்குடன் பதில் கொடுத்து வருகிறது. இருந்தாலும், தன் விருப்பம்போல் பேசுவதை ட்ரம்ப் விடுவதாக இல்லை. இது எங்கு போய் முடியும் என்றும் தெரியவில்லை.