கொல்கத்தாவின் துர்கா பூஜையை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது


வட இந்தியாவில் துர்கா பூஜை என்பது மிகவும் பிரபலம். குறிப்பாக மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இந்த துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது.  10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் துர்க்கையையும், துர்க்கையின் வாரிசுகளாக வணங்கப்படும் லட்சுமி, சரஸ்வதி, கணேஷ், முருகன் ஆகியோரையும் பக்தர்கள் வணங்குவார்கள். இந்த விழாவை தற்போது கலாசார பாரம்பரிய  பட்டியலில் அறிவித்துள்ளது யுனெஸ்கோ.


ஸ்பேஸ்எக்ஸில் பாலியல் துன்புறுத்தல்கள்… கண்டுகொள்ளாத நிர்வாகம்; பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கை!




ஒவ்வொரு வருடமும் யுனெஸ்கோ உலகளவில் உள்ள கலாசார மரபு மற்றும் கலைகளை ஆராய்ந்து காலாசார பாரம்பரிய பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான பட்டியல் வெளியீடு இன்று பாரிஸில் நடைபெற்றது. அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி துர்கா பூஜை பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Kenya Drought: கென்யாவில் வறட்சியின் கோரம்: சுருண்டு விழுந்து இறந்த ஒட்டகச் சிவிங்கிகள்!


இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், துர்கா பூஜை மதம், கலையின் பொது நிகழ்ச்சியின் சிறந்த நிகழ்வாகவும், கூட்டு கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான செழிப்பான களமாகவும் கருதப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது


யுனெஸ்கோவின் இணையதளப்பக்கத்தில் பார்க்க..!




முன்னதாக,  2017ல் கும்பமேளாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது. யோகா 2016 இல் யுனெஸ்கோவின்  கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது, 2014 இல் பஞ்சாபின் பாரம்பரிய பித்தளை மற்றும் செம்பு கைவினைப்பொருட்கள், 2013 இல் மணிப்பூரின் சங்கீர்த்தன சடங்கு பாடலும் இந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


உணவு, நீர் எதுவும் இல்லை.. 4 நாட்கள் ரூமுக்குள் பூட்டிவைத்து பாலியல் வன்கொடுமை.. கைதான கொடூரன்..






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண